அவுஸ்திரேலியாவுக்கு எதிரான எங்கள் திட்டம் இது தான்.. இலங்கை அணித்தலைவர் திமுத் ஓபன் டாக்

Report Print Basu in கிரிக்கெட்

அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான தனது திட்டங்களை இலங்கை அணித்தலைவர் திமுத் கருணாரத்ன கூறியுள்ளார்.

உலகக் கோப்பை தொடரில் இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ள லீக் போட்டியில் சர்வதேச ஒரு நாள் தரவரிசையில் 9வது இடத்தில் இருக்கும் இலங்கை அணி, 5வது இடத்தில் இருக்கும் அவுஸ்திரேலியா அணியுடன் மோதவுள்ளது.

அரையிறுதி வாய்ப்பை தக்க வைக்க இலங்கை அணி எதிர்வரும் போட்டிகளில் வெற்றிப்பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இந்நிலையில், அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான தனது திட்டத்தை அணித்தலைவர் திமுத் கருணாரத்ன கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, பயிற்சி ஆட்டத்தில் அவுஸ்திரேலிய அணியுடன் மோதினோம். அதனால், அவுஸ்திரேலியா வீரர்கள் குறித்து எங்களுக்கு தெரியும். அவர்களுக்கு எதிராக சில திட்டங்கள் உள்ளது. அதன் படி நாங்கள் விளையாடுவோம்.

உலகக் கோப்பையில் ஷார்ட் பந்தை விளையாடுவது கடினமாக உள்ளது. ஷார்ட் பந்தின் மூலமே பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை கைப்பற்றுகின்றனர். அவுஸ்திரேலியா வீரர்கள் எங்களுக்கு எதிராக ஷாரட் பந்தை கண்டிப்பாக வீசுவார்கள். ஆனால், ஒரு ஓவரில் இரண்டு ஷார்ட் பந்து மட்மே அவர்களால் வீச முடியும். அதை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

இலங்கை வீரர்கள் சிலர் ஷார்ட் பந்தை சிறப்பாக விளையாடுவார்கள். சிலருக்கு கடினமாக இருக்கும். ஆனால், அவர்கள் அதை அடித்து ஆட வேண்டும் என்று நினைத்தால், அடித்து ஆட வேண்டும். ஏனெனில், நமக்கு ஓட்டங்கள் மிக முக்கியம்.

எங்களது திட்டங்களை குறித்து உடை மாற்றும் அறையில் கலந்துரையாடினோம். அவுஸ்திரேலியா பந்துவீச்சுக்கு எதிராக நாங்கள் சிறப்பாக செயல்படுவோம் என திமுத் நம்பிக்கை தெரவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்