என்னைப் போன்று இவர் தான் விளையாடுகிறார்... இலங்கை ஜாம்பவான் மஹேலாவின் பதில்

Report Print Santhan in கிரிக்கெட்

இலங்கை அணியின் ஜாம்பவான மஹேல ஜெயவர்த்தனே தன்னைப் போன்றே தற்போது நியூசிலாந்து வீரர் ஆடிவருவதாக கூறியுள்ளார்.

இலங்கை அணியில் நட்சத்திர ஆட்டக்காரர்களாக இருந்த வீரர்களின் வரிசையில் மஹேல ஜெயவர்த்தனேவும் ஒருவர், இவர் பல போட்டிகளை இலங்கை அணிக்காக வெற்றியை தேடித்தந்துள்ளார். அதுமட்டுமின்றி இலங்கை அணியின் ஜாம்பாவானாக இருக்கும், இவர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் போட்டியில் மும்பை அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் இவரிடம் சமீபத்தில் பேட்டி ஒன்று எடுக்கப்பட்டது, அதில், தற்போது வீரர்களில் யார் உங்களைப் போன்று விளையாடுகிறார்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு ஜெயர்வர்த்தனே, நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனின் பேட்டிங்கில் தன்னை காண்பதாக ஜெயவர்தனே தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை தொடரில், நியூசிலாந்து அணி இறுதிப் போட்டி வரை செல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் வில்லியம்சன் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்