என் மீது மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட தாக்குதல்! வேதனையுடன் பேசிய இலங்கை வீரர் மேத்யூஸ்

Report Print Raju Raju in கிரிக்கெட்

என் உடற்தகுதி குறித்து வைக்கப்பட்ட விமர்சனங்களை என் மீது மேற்கொள்ளப்பட்ட திட்டமிடப்பட்ட தாக்குதலாக கருதுவதாக ஏஞ்சலோ மேத்யூஸ் கூறியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் மேத்யூஸ் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், எனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் எனது சாதனைகள் குறித்து நான் திருப்தியடையவில்லை.

நான் என்னால் முடிந்ததை விட குறைவாகவே சாதித்துள்ளேன்.

2013 முதல் 2016 வரை நான் அதிகளவு போட்டிகளில் விளையாடினேன், அது எனது உடலிற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது, முக்கியமாக காயத்தால் அதிகம் பாதிக்கப்பட்டேன்.

இதன் காரணமாகவே 2016 முதல் 2018 வரை அணியில் முழுமையாக இடம்பெற என்னால் முடியவில்லை

நியுசிலாந்து அணிக்கு எதிரான டி20 அணியிலிருந்து நீக்கப்பட்து குறித்து கேட்கிறீர்கள்.

அவர்கள் என்னை நீக்கவேண்டும் என விரும்பினால் தெரிவுக்குழுவினரின் சிந்தனையை என்னால் மாற்ற முடியாது ,அவர்களே அதனை முடிவு செய்தனர் என கூறியுள்ளார்.

தனது உடற்தகுதி குறித்து முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் குறித்து பதிலளித்துள்ள மேத்யூஸ், இந்த விமர்சனங்களை முன்வைக்குமாறு யார் கேட்டுக்கொண்டனர் என நீங்கள் கிரஹாம் லபரோயிடமும், சண்டிக ஹதுருசிங்கவிடமும் கேட்க வேண்டும்.

அது என் மீது மேற்கொள்ளப்பட்ட திட்டமிடப்பட்ட தாக்குதலாகவே நான் கருதினேன், என் மீது பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன என வேதனையுடன் கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்