டோனி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் தவிர்ப்பது ஏன்? கசிந்தது தகவல்

Report Print Raju Raju in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் டோனி தனக்கு ஏற்பட்ட காயம் காரணமாகவே போட்டிகளில் பங்கேற்பதை தவிர்த்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும், முன்னாள் தலைவருமான மகேந்திர சிங் டோனி இந்திய துணை ராணுவத்தில் பணியாற்றும் பொருட்டு அணியிலிருந்து இரண்டு மாத கால தற்காலிக ஓய்வை கேட்டுப் பெற்றார்.

இதையடுத்து மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்களில் டோனி பங்கேற்கவில்லை.

இதனிடையே தனது இரண்டு மாத கால ஓய்வை மேலும் இரு மாதங்கள் அவர் நீட்டித்துள்ளதாகவும் அதனால் நவம்பர் மாதம் வரை அவர் எவ்வித போட்டிகளிலும் பங்கேற்கமாட்டார் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த ஓய்வு நீட்டிப்பு குறித்து புதிய தகவல் கசிந்துள்ளது.

அதாவது, ஐபிஎல் தொடரின் போது முதுகு பகுதியிலும், உலகக்கிண்ண தொடரின் போது மணிக்கட்டிலும் டோனிக்கு ஏற்பட்ட காயமானது இன்னும் முழுமையாக குணமாகவில்லையாம். இதன் காரணமாகவே போட்டிகளில் பங்கேற்க அவர் தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்