தமிழ் பெண்ணை திருமணம் செய்யும் அவுஸ்திரேலியா வீரர் மேக்ஸ்வேல்: வெளியான நிச்சயதார்த்த புகைப்படம்

Report Print Santhan in கிரிக்கெட்

அவுஸ்திரேலியா அணியின் அதிரடி ஆட்டக்காரரான மேக்ஸ்வேலுக்கும், தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வினிராமன் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்த புகைப்படம் தற்போது வெளியாகி பலரது வாழ்த்துக்களை பெற்று வருகிறது.

அவுஸ்திரேலிய அணியின் முன்னணி ஆல் ரவுண்டராக மட்டுமின்றி உலகளவில் மிகச்சிறந்த அதிரடி வீரராக திகழ்பவர் க்ளென் மேக்ஸ்வெல்.

கிட்டத்தட்ட 10 வருடங்களாக ஆஸ்திரேலியா அணிக்காக ஆடி வருகிறார். கடந்த 2015-ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா அணி உலகக்கோப்பை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார்.

ஆனால் சமீபகாலமாக மோசமான பார்மை வெளிப்படுத்தி வந்த, இவர் சென்ற ஆண்டு இறுதியில் தனக்கு மனரீதியாக சில பிரச்சனைகள் இருப்பதாகவும், கிரிக்கெட்டில் இருந்து தற்காலிக விடுப்பு வேண்டும் என்று கூறி எடுத்துக்கொண்டார்.

இந்த மனரீதியான பிரச்சனையில் இருந்து மேக்ஸ்வெல்லை மீட்டு கொண்டுவந்ததில் அவருடைய தோழி வினிராமனுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது.

மேலும் அதற்கு பிறகு அவுஸ்திரேலிய அணியில் இடம்பிடித்த மேக்ஸ்வெல் தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்தார். அதுமட்டுமின்றி தற்போது பல்வேறு டி20 தொடரிலும் அசத்தி வரும் மேக்ஸ்வெல் கடந்த சில வருடங்களாக வினிராமன் என்கிற இந்திய வம்சாவளி பெண்ணுடன் காதலில் இருந்தார்.

மேலும் அவரும் மேக்ஸ்வெல்லும் டேட்டிங் செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி விருது வழங்கும் விழாவிற்கும் சேர்ந்தே சென்றனர்.

அதன்மூலம் அவர்கள் இருவருக்கும் இருந்த காதல் வெளியானது. பிறகு அதனை இருவரும் வெளிப்படையாக ஒப்புக்கொண்டு அவ்வப்போது வினி ராமனுடன் சேர்ந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில் இந்திய வம்சாவழியை சேர்ந்த வினிராமனை மெக்ஸ்வெல்லுக்கு மிகவும் பிடித்துப்போக, தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டுள்ளார்.

இதற்கு வினிராமனும் சம்மதிக்க, தற்போது இருவருக்கும் இரண்டு தினங்களுக்கு முன்பு இந்திய முறையில் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அந்த நிச்சயதார்த்த புகைப்படத்தையும் வினிராமன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இவர்களது நிச்சயதார்த்த புகைப்படத்தை ரசிகர்கள் பகிர்ந்து தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்திய வம்சாவளியான வினிராமன் தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர், மெல்போர்னில் பிறந்து வளர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்