உலகளவில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இப்போது நடக்காது! கொரோனாவை நாம் வெல்லவில்லை: தமிழக வீரர் அஷ்வின்

Report Print Raju Raju in கிரிக்கெட்

உலகளவில் இப்போதைக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு வாய்ப்பில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், அக்டோபரில் டி20 உலகக் கோப்பை போட்டியும் நடைபெறுமா என்ற சந்தேகம் நிலவுகிறது. இந்தப் போட்டி தொடர் அவுஸ்திரேலியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த இந்திய அணி வீரர் அஷ்வின் "கிரிக்இன்போ" இணையதளத்துக்கு பேட்டியளித்துள்ளார்.

அவர் கூறுகையில், கொரோனா வைரஸ் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. பல நாடுகளில் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. அதனால் இப்போதைக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெற வாய்ப்பு குறைவாக இருக்கிறது. நாம் இன்னமும் கொரோனாவை முழுமையாக வெல்லவில்லை. கிரிக்கெட்டின் நலன் கருதினால், இப்போதைக்கு பல கிரிக்கெட் தொடர்கள் உடனடியாக நடக்க வாய்ப்பில்லை.

4 நாள் டெஸ்ட் போட்டி திட்டம் என்னை பெரிதாக ஈர்க்கவில்லை. நான் ஒரு சுழற்பந்துவீச்சாளர், ஏற்கனவே இருக்கும் நாளிலிருந்து ஒரு நாளை தூக்கிவிட்டால் எப்படி இந்தப் போட்டி ஆராக்கியமானதாக இருக்கும் என தெரியவில்லை என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்