2011 உலகக் கோப்பை சூதாட்ட விசாரணை: மஹேல ஜெயவர்தனாவை அலைக்கழித்த இலங்கை பொலிஸ்

Report Print Basu in கிரிக்கெட்

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேல ஜெயவர்தன இன்று விளையாட்டு அமைச்சின் சிறப்பு புலனாய்வு பிரிவு முன் ஆஜரானார், ஆனால் அவர் தனது வாக்குமூலம் அறிக்கையை பதிவு செய்யாமல் வெளியேறினார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 2011 கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டி தொடர்பான மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டுகள் குறித்த தனது அறிக்கையை பதிவு செய்ய ஜூலை 3ம் திகதி ஆஜராகுமாறு ஜெயவர்தனாவுக்கு சிறப்பு புலனாய்வு பிரிவு நேற்று சம்மன் அனுப்பியிருந்தது.

முன்னதாக இன்று ஜெயவர்தனாவிடமிருந்து வாக்குமூல அறிக்கை பதிவு செய்யப்படாது என்றும், பின்னர் மற்றொரு நாளில் அவர் மீண்டும் வரவழைக்கப்படுவதாகவும் விளையாட்டு அமைச்சின் சிறப்பு புலனாய்வு பிரிவு அறிவித்தது.

இருப்பினும், முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயவர்தன, தனக்கு தகவல் தெரிவிக்கப்படாததால், சிறப்பு புலனாய்வு பிரிவு பிரிவுக்கு வந்துவிட்டதாகவும், ஒத்திவைப்பு குறித்து தெரியாது என்றும் கூறினார்.

முன்னாள் விளையாட்டு அமைச்சர் மகிந்தானந்தா அலுத்காமகே ஜூன் மாதம் எழுப்பிய மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டுகள் குறித்து அறிக்கை பதிவு செய்ய வரவழைக்கப்பட்ட நான்காவது இலங்கை கிரிக்கெட் வீரர் மஹேல ஜெயவர்தன ஆவார்.

இந்த சம்பவம் தொடர்பாக இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் உப்புல் தரங்க மற்றும் தெரிவுக்குழுவின் முன்னாள் தலைவர் அரவிந்த டி சில்வா, முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார ஆகியோர் விளையாட்டுத்துறை குற்றங்களை விசாரிக்கும் குழுவில் ஏற்கனவே வாக்குமூலம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்