ஐபிஎல் தொடரில் இருந்து இலங்கை வீரர் மலிங்கா திடீர் விலகல்! அவருக்கு பதில் யார் தெரியுமா?

Report Print Santhan in கிரிக்கெட்

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் இருந்து மலிங்கா தனிப்பட்ட காரணங்களால் இந்த சீசனில் இருந்து விலகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஐபிஎல் தொடர், இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது.

இதற்காக ஒவ்வொரு ஐபிஎல் அணி வீரர்களும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ளனர். அதன் படி மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுவிட்டனர்.

இந்நிலையில், தற்போது , தனிப்பட்ட காரணங்களால் இந்த ஆண்டு சீசனில் விளையாட முடியாத நிலையில் இருப்பதாக அணி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த ஆண்டு நடக்கும் ஐபிஎல் சீசன் டி20 தொடரில் தனிப்பட்ட காரணங்களால் தன்னால் பங்கேற்க முடியாது என்று லசித் மலிங்கா தெரிவித்துள்ளார்.

அவர் குடும்பத்துடன் இலங்கை செல்ல உள்ளார். ஆதலால், மும்பை இந்தியன்ஸ் அணியில் அவுஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்ஸன் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் அபுதாபி வந்து அணியில் இணைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது,

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்