அவுஸ்திரேலியாவை 24 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து

Report Print Kavitha in கிரிக்கெட்

இங்கிலாந்து- அவுஸ்திரேலியா இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகின்றது.

அவுஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

இதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் டாஸ் வென்று இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

களமிறங்கிய இங்கிலாந்து அணியில் மார்கன் 42 ரன், ஜோ ரூட் 39 ரன், டாம் கரன் 37 ரன் மற்றும் அடில் ரஷீத் 35 ரன்னும் எடுத்து இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 231 ரன்கள் எடுத்தது.

இங்கிலாந்து சார்பில் ஜோப்ரா ஆர்ச்சர், வோக்ஸ், சாம் கரன் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய அவுஸ்திரேலியா அணி 232 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் விளையாடியது.

ஆரோன் பிஞ்ச் 73 ஆட்டங்களையும், லாபஸ்சாக்னே 48 ரன்னும், அலெக்ஸ் கேரி 36 ரன்களையும் சேர்த்தார். மற்றவர்கள் விரைவில் வெளியேறினர்.

அவுஸ்திரேலியா சார்பில் சம்பா 3 விக்கெட், ஸ்டார்க் 2 விக்கெட் வீழ்த்தினர். இறுதியில் அவுஸ்திரேலிய அணி 207 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டில் ஆட்ட நாயகனாக ஜோப்ரா ஆர்ச்சர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேலும் 24 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து, ஒருநாள் தொடரை1-1 என சமன் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்