சிக்ஸர் அடித்த அடுத்த பந்திலே அவுட்டான டோனி! வெளியான வீடியோ காட்சி

Report Print Santhan in கிரிக்கெட்
287Shares

சென்னை அணிக்கெதிரான போட்டியில், டோனி சிக்ஸர் அடித்த பந்திலே அவுட்டாகி பவுலியன் திரும்பிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

ஐபிஎல் தொடரின் நேற்றைய மும்பை அணிக்கெதிரான போட்டியில், சென்னை அணி மோசமான தோல்வியை சந்தித்தது.

இதன் மூலம் இந்த தொடரில் இனி சென்னை அணி பிளே ஆப் செல்வது முடிந்துவிட்டது. டோனி கூட, வரும் ஆட்டங்களில், மேலும் இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு, அடுத்த சீசனில் நல்ல ஒரு அணியாக திரும்புவோம் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இப்போட்டியில் டோனி 6.4-வது ஓவரில் அவுட்டாகினார். அதாவது அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் சிக்ஸர் பறக்கவிட்ட டோனி, அடுத்த பந்திலும் அடித்து ஆட முற்பட்டு, கீப்பர் கேட்ச் அவுட் ஆகி வெளியேறினார்.

அதாவது முதல் பந்தில் சிக்ஸர் அடித்தவுடன், பந்து வீச்சாளரான சாஹர் பந்தை பிடித்து சற்று வேகமாகவோ அல்லது கூக்ளி போன்றோ போடாமல், மேலே தூக்கி அடிப்பது போன்று வீசினார்.

டோனியும் அந்த பந்தை அடித்து ஆட முற்பட, ஆனால் பந்தானது பிட்சில் பட்டவுடன், லேசாக டெர்ன் ஆக, பந்தானது பேட்டில் பட்டு, கீப்பரிடம் சென்றது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்