அவுஸ்திரேலியாவில் தனிமைப்படுத்தலில் இருந்த இந்திய நட்சத்திர வீரர் ரோகித் சர்மா குறித்த முக்கிய தகவல் ஒன்றை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் போது காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து முழுமையாக மீளாத காரணத்தால், உடல்தகுததியை நிரூபிக்க நவம்பர் 19ம் தேதி முதல் ரோகித் சர்மா பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்றார்.
பேட்டிங், பீல்டிங் மற்றும் விக்கெட்டுகளுக்கு இடையில் ஓடுவது தொடர்பான அவரது திறன்களை வெவ்வேறு அளவீடுகளில் சோதித்த என்.சி.ஏ மருத்துவக் குழு, ரோகித் சர்மாவின் உடல் தகுதி குறித்து திருப்தி அடைந்தது.
இதனையடுத்து, ரோகித் அவுஸ்திரேலியா செல்ல பிசிசிஐ பச்சைக் கொடி காட்டியது. அவுஸ்திரேலியா வந்த ரோகித் சர்மா தொடர்ந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்தார்.
தற்போது 14 நாட்கள் தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்த ரோகித் சர்மர், மெல்போர்ன் உள்ள இந்திய அணியில் இணைந்ததாக பிசிசிஐ ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
மேலும், இந்திய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ரோகித் சர்மாவை நலம் விசாரித்த வரவேற்ற வீடியோவையும் பிசிசிஐ பகிர்ந்துள்ளது.
இந்நிலையில், அவுஸ்திரேலியா-இந்தியா மோதும் 3வது டெஸ்ட் சிட்னியில் ஜனவரி 11ம் தேதி தொடங்குகிறது.
Look who's joined the squad in Melbourne 😀
— BCCI (@BCCI) December 30, 2020
A warm welcome for @ImRo45 as he joins the team 🤗#TeamIndia #AUSvIND pic.twitter.com/uw49uPkDvR
தனிமைப்படுத்தலுக்கு பிறகு ரோகித் சர்மாவின் உடற்தகுதியை இந்திய அணியின் மருத்துவக் குழு மதிப்பீடு செய்த பின்னர், அவர் 3வது டெஸ்டில் பிளேயிங் லெவனில் இடம்பெறுவாரா என்பது குறித்த முடிவெடுக்கப்படும் என இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஏற்கனவே தெரிவித்துள்ளார்.