கொரோனா தாக்காமல் இருக்க இதை எல்லாம் குறைத்து கொள்ளுங்கள்: உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு

Report Print Santhan in நோய்

கொரோனா தாக்காமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

உலகையே அச்சுறுத்தும் நோயாக கொரோனா மாறி வருகிறது. இந்த நோய் காரணமாக தினந்தோறும் ஏதேனும் ஒரு நாட்டில் இறப்புகள் ஏற்பட்டு கொண்டு தான் இருக்கிறது.

சாதாரண இருமல், சளி போன்று ஆரம்பிப்பதால், இந்த நோயின் நிலையை ஆரம்பத்திலேயே அறிய முடியாமல் பலர் உயிர் இறக்கும் நிலை ஏற்படுகிறது.

இதன் காரணமாக அடிக்கடி கை கழுவுதல், கைகளை கொண்டு முகம், வாய்களை தொட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, உலகமே இக்கட்டான சூழ்நிலைகளைச் சந்தித்து வரும் நிலையில், சீனாவின் வுகான் மாகாணத்தில் நேற்று கொரோனாவுக்கு புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை என கிடைத்துள்ள தகவல் ஆறுதல் அளிப்பதாக தெரிவித்தார்.

சுகாதார வசதிகள் குறைவாக உள்ள நாடுகள் கொரோனாவால் அதிக பாதிப்பை சந்திக்கும் என எச்சரித்துள்ளதையும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் போதுமான அளவு கிடைக்க உலகச் சுகாதார அமைப்பு பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் சமூக ஒன்று கூடல்களை தவிர்க்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மது அருந்துவது, புகைபிடிப்பது, சர்க்கரை அதிகமுள்ள குளிர்பானங்களை உட்கொள்வதை குறைத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்