கொரோனா வைரஸ் எந்த பொருள் மீது எவ்வளவு நேரம் உயிர்வாழும்? தீர்வு

Report Print Abisha in நோய்

கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க நாம் பல நடைமுறைகளை செய்து வருகிறோம். ஆனால், வைரஸ் பாதிப்பு குறித்து ஆராச்சியாளர்கள் புதுபுது தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.

இதில், சில குழப்பங்களும் உள்ளது. காரணம் வைரஸ் ஒரு பொருளை தொட்டால் எப்படி பரவும் என்பதுதான். ஆம் கொரோனா வைரஸ் சில பொருட்கள் மீது நிச்சயம் உயிர்வாழும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

அந்தவகையில் எந்த இடத்தில் எவ்வளவு நேரம் உயிர் வாழும் என்பது குறித்து பார்க்கலாம்.

காற்றில் உயிர்வாழும் நேரம்

இருமல் மற்றம் தும்மலின்போது மூக்கும் மற்றும் வாய்வழியாக மிகச்சிறிய சுமார் 3,000 எண்ணிக்கை அளவிலான உமிழ்நீர்த் துளிகள் வெளிவரும்.

இந்த துளிகளின் அளவு 1-5மைக்ரோ மீட்டர் மட்டுமே அதாவது மனிதர்களின் சாராசரி மயிரிழை ஒன்றின் அகலத்தில் 30ல் ஒரு பங்கு

ஆடைகள் பொருட்கள் மீது படியாமல் இந்த துகள்கள் காற்றில் மூன்று மணிநேரம் வரை உயிர்வாழும்.

இன்ஃபுளுயன்சா வைரஸ்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் பாதிக்கப்பட்டவரின் தும்மலில் இருந்து வெளியாகும் சிறு துளியில் பல பத்தாயிரம் வைரஸ் கிருமிகள் இருப்பது தெரியவந்தது.

இந்த அளவு ஒவ்வொரு வைரஸ்க்கும் வேறுபடலாம்.

வைரஸ் மலத்தில் எவ்வளவு நேரம் உயிர்வாழும்

மனித மலத்தின் மீது நீண்ட நேரம் உயிர்வாழும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் கால அளவு எதுவும் குறிப்பிடப்படவில்லை.

கொரோனா வைரஸ் பரவியுள்ள கழிவறையை பயன்படுத்திய ஒருவர் கைகளை முழுமையாக சுத்தம் செய்யாமல் வேறு எந்த பொருட்களை தொட்டாலும் அவற்றின் மீது இந்த வைரஸை பரவ செய்ய முடியும்.

அதைவிட முக்கியமாக, வைரஸ் தொற்று உள்ள இடத்தை தொட்டுவிட்டு முகத்தை தொடுவதனால் அந்த வரைஸ் தொற்று நிச்சயம் ஏற்பட்டுவிடும்.

உலோகம், பிளாஸ்டிக், கண்ணாடி

கொரோனா குடும்பத்தை சேர்ந்த பல்வேறு வைரஸ்களும், முறையாக சுத்தம் செய்யப்படாத உலோகங்களை, பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி ஆகியவற்றின் மீது ஒன்பது நாட்கள் வரை உயிர்ப்புடன் இருக்கும் என்று முந்தைய ஆய்வுகள் கூறுகின்றன.

குளிர்ச்சியாக சூழல்களில் அவை 28நாட்கள் வைரகூட உயிர் பிழைத்திருக்க வாய்ப்புண்டு.

அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனத்தின் ஆய்வில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் உலோகம், பிளாஸ்டிக் ஆகியவற்றின் மேற்பரப்பில் இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை உயிர்ப்புடன் இருப்பது தெரியவந்துள்ளது.

எனினும், தாமிர உலோகத்தால் ஆன பொருட்களின் மேற்பரப்பில் நான்கு மணி நேரம் மட்டுமே உயிர்வாழ்வதாக கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் ஆடைகள் மீது எவ்ளவு நேரம் இருக்கும்?

துணிகள் மற்றும் ஆடைகள் ஆகியவற்றின் மீது இந்த வைரஸ் எவ்வளவு நேரம் உயிர்ப்புடன் இருக்கும் என்று இதுவரை கண்டறியப்படவில்லை.

எனினும், ஈரத்தை உறிஞ்சிக்கொண்டு விரைவில் காய்ந்துவிடும் தன்மையுடைய கார்டுபோர்டு அட்டைகளின் மேற்பரப்பில் பிளாஸ்டிக், உலோகம் ஆகிவற்றைவிட குறைவான நேரமே இந்த கொரோனா வைரஸ் உயிர்ப்புடன் இருக்கும்.

சுற்றியுள்ள காற்றின் ஈரப்பதம், வெப்பநிலை ஆகியவற்றில் உண்டாகும் மாற்றம் இந்த நேர அளவின் மீது தாக்கம் செலுத்தும்.

கொரோனா வைரஸை பொருட்கள் மீது அழிப்பது எப்படி?

கைகள் துடைக்க பயன்படுத்தும் சானிடைசர், அல்லது 0.5% ஹைட்ரஜன் பெராக்ஸைடு பிளீச்சிங் பவுடர் பயன்படுத்தி சுத்தம் செய்யலாம்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்