பெறுமதியற்றவர்களாக மாறிவரும் மாணவர்கள்

Report Print Kumar in கல்வி

பாடசாலை மாணவர்களுக்கு வாசிப்பு மறக்கடிக்கப்பட்டதன் காரணமாக கிராமிய கலை, கலாச்சாங்கள், தொடர்பான எவ்வித அறிவும் அற்றவர்களாக, பெறுமதியற்றவர்களாக இருக்கின்றனர் என மட்டக்களப்பு கல்வி வலயத்தின் பிரதிக்கல்விப்பணிப்பாளர் ஜனாப் எஸ்.எம்.ஹைதர் அலி தெரிவித்தார்.

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கல்லடி உப்போடை விவோகனந்தா மகளிர் கல்லூரியில் புனரமைக்கப்பட்ட பாடசாலை கட்டட திறப்பு விழாவும், பரிசளிப்பு விழாவும் இன்றைய தினம் இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் திலகவதி ஹரிதாஸ் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

நவீன ஊடகங்களின் ஊடுருவல் காரணமாக வாசிப்பு என்பது சமூகத்தில் இருந்து மறக்கடிக்கப்பட்ட ஒரு பழக்கமாக காணப்படுகின்றது.

பாடசாலை மட்டத்தில் ஆசிரியர்களை எடுத்துக்கொண்டாலும் மாணவர்களை எடுத்துக்கொண்டாலும் வாசிப்பதற்கு நேரங்களை ஒதுக்கிக்கொள்ள முடியாத வகையில் வேலைப்பளுக்கள் அதிகரித்துச் செல்கின்றன.

பாடசாலைகளில் நேர அட்டவனைகளில் நூலகத்திற்கான நேரம் ஒதுக்கப்பட்டிருக்கும். அதனை ஓய்வுநேரமாக எடுத்துக் கொள்கின்றார்கள். சிலர் வேறு பாடங்களை அந்த வேளையில் கற்பிக்கின்றார்கள்.

நூலகத்தின் பெறுமதியினையும் வாசிப்பின் பெறுமதியினையும் உணராத வகையில் பாடசாலைகள் செயற்பட்டுக்கொண்டிருப்பது கவலைக்குரிய விடயமாகும்.

பாடசாலை மாணவர்களுக்கு வாசிப்பு மறக்கடிக்கப்பட்டதன் காரணமாக கிராமிய கலை,கலாசாரங்கள், விளையாட்டுகள் தொடர்பான எந்தவித அறிவுகளும் அற்றவர்களாக எமது பாரம்பரியங்களை மறந்து இன்றைய சமூகத்தில் பெறுமதி அற்றவர்களாக காணப்படுகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்