பாலியல் தொல்லை குறித்து பேசிய பிரியங்கா சோப்ரா

Report Print Fathima Fathima in பொழுதுபோக்கு

ஹாலிவுட் தயாரிப்பாளர் Harvey Weinstein தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகைகள் பலரும் கூறிவருகின்றனர், டுவிட்டரில் Me Too என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்டாகி வருகிறது.

பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா இதுகுறித்து கூறுகையில், இது பாலியல் தொல்லை பற்றிய சர்ச்சை மட்டுமல்ல, மாறாக பெண்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக தான்.

ஹாலிவுட்டில் மட்டுமல்ல, அனைத்து இடங்களிலும் பாலியல் தொந்தரவு உள்ளது.

Harvey Weinstein-னை போன்று பலர் உள்ளனர், உலகளவிலும் இது நடக்கிறது என தெரிவித்துள்ளார்.

மேலும் திறமையான பெண்களுக்கு வேலை கிடைக்கும் என்றும், இனியும் இதை பொறுத்துக் கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers