இயக்குநர் மணிரத்னம் மருத்துவமனையில் திடீர் அனுமதி!

Report Print Kabilan in பொழுதுபோக்கு

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநரான மணிரத்னம், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது வீடு திரும்பியுள்ளார்.

மௌனராகம், தளபதி, அலைபாயுதே, ரோஜா என பல வெற்றிப்படங்களை இயக்கி, தமிழ் திரையுலகின் மிக முக்கிய இயக்குநராக இருப்பவர் மணிரத்னம். ஏ.ஆர்.ரகுமானை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தியவர் என்ற பெருமையைக் கொண்டவர்.

தற்போது ‘பொன்னியின் செல்வன்’ நாவலை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மணிரத்னம், அதற்காக விரைவில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், நேற்றைய தினம் அவருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கார்டியாக் பிரச்சனை தொடர்பான பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர் வீட்டிற்கு திரும்பினார். இது வழக்கமான பரிசோதனை தான் என்றும், தனது பணியை அவர் தொடர்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்