பிரபல தமிழ் சீரியல் நடிகரும் அவரது தாயாரும் கைது! மனைவி கொடுத்த அதிரடி புகார்

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிரபல சின்னத்திரை நடிகையான ஜெயஸ்ரீ, தன்னுடைய கணவர் மாமியாருடன் சேர்ந்து கொடுமைபடுத்துவதாகவும், அவருக்கு வேறொரு நடிகையுடன் தொடர்பிருப்பதாகவும் கூறி புகார் கொடுத்துள்ளது சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பாப சேப்படுகிறது.

பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிபரப்பாகும் வம்சம் என்ற தொடரில் வில்லியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஜெயஸ்ரீ, அதே போன்று விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபிஸ் என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் ஈஸ்வர்.

ஆபிஸ் சீரியலுக்கும் பின் பல சீரியல்களில் நடித்து வந்த ஈஸ்வர், ஜெயஸ்ரீயை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த ஜோடி இப்போது திருவான்மியூரில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகை ஜெயஸ்ரீ அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

அதில், தனது கணவர் ஈஸ்வர் அவரது தாயாருடன் சேர்ந்து கொண்டு கொடுமைபடுத்துவதாகவும், பிரபல தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் நடிகை ஒருவருடன் தொடர்பு வைத்துக்கொண்டு தன்னை தொந்தரவு செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு, தனது நகைகள், 30 லட்சம் ரூபாய் வரையிலான பணத்தையும் ஈஸ்வர் அபகரித்துக் கொண்டு தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், குழந்தையுடன் தவித்து வருவதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து பொலிசார் ஈஸ்வரை அழைத்து நடத்திய விசாரணையில், மனைவியை கொடுமைபடுத்தியதை ஒப்புக்கொண்டதால் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்