உன்னை திருமணம் செய்ய ஆசை... நடிகை பூர்ணாவை வார்த்தையால் மயக்கிய நபர்! மேலும் 2 பேர் கைது

Report Print Santhan in பொழுதுபோக்கு
766Shares

பிரபல திரைப்பட நடிகையான பூர்ணாவை பணம் கேட்டு மிரட்டிய கும்பல் சம்பவத்தில், நடிகை அவர்களிடம் எப்படி விழுந்தார் என்பது குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு அமுலில் உள்ளதால் பொது மக்கள் அதிகம் பயன்படுத்தி வந்த டிக் டாக் பக்கம், திரைப்பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என பலரும் நுழைந்தனர்.

அதன் படி நடிகை பூர்ணாவும் பொழுது போக்கிற்காக, டிக் டாக் பக்கம் நுழைந்தார். அதில், ஷம்னா காசிம் என்பதுதான் இவரது உண்மையான டிக் டாக் அக்கவுண்ட்.

அப்படி இவர் டிக் டாக்கில் வீடியோ பதிவிட்டு கொண்டிருந்த போது தான், இளைஞர் ஒருவர் பழக்கமாகியுள்ளார். அவர் தான் துபாயில் நகைக் கடை ஒன்று வைத்திருப்பதாகவும், நீ அழகாக இருக்கிறாய், உன்னை திருமணம் செய்ய ஆசையாக உள்ளது என்று கூறியுள்ளார்.

இதைக் கேட்டவுடன் பூர்ணா அவரைப் பற்றி எதுவும் சரியாக விசாரிக்காமல், அவரை வீட்டிற்கு முறைப்படி வந்து பெண் கேட்கும் படி கூறியுள்ளார்.

இதையடுத்து, குறித்த நபர் 6 பேரை அழைத்துக் கொண்டு பூர்ணாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவர்களின் நடவடிக்கைகளை பார்த்து, பூர்ணாவுக்கு இவர்கள் பொய் கூறுகிறார்கள் என்பது தெரிந்துள்ளது.

இதையடுத்து, அந்த கும்பல் 10 லட்சம் கேட்டு மிரட்ட, உடனே பூர்ணாவின் தாயார் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அதன் பின்னரே இந்த விஷயம் வெளியில் தெரியவந்துள்ளது. பூர்ணாவின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில், திருச்சூரை சேர்ந்த ரபீக், ரமேஷ் கண்ணன், சிவதாசன், அஷ்ரப் ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களின் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் விசாரணையின் போது, இது ஒரு மிகப் பெரிய நெட் வொர்க் என்பது தெரியவந்தது.

கேரளாவில் தங்க கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள ஸ்வப்னாவுக்கும், இந்த கும்பலுக்கும் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.

கல்யாண மோசடி கும்பல் பணம் பறிக்க முயன்றது தொடர்பாக இதுவரை 10-க்கும் மேற்பட்டோர் கைதாகியுள்ளனர்.

மேலும், மொடல் அழகிகள், டிவி சீரியல் நடிகைகள் உட்பட பல பெண்களுக்கு, சினிமா வாய்ப்பு தருவதாக சொல்லி, நம்ப வைத்து ஏமாற்றி, அவர்களிடம் பணம், நகைகளை இந்த கும்பல் பறித்து வந்துள்ளது.

அதுமட்டுமின்றி, பாலக்காட்டிலுள்ள ஒரு ஹோட்டல் ரூமில் பெண்களை அடைத்து வைத்து மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுவும் இந்த கும்பல் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதே வழக்கு தொடர்பாக மேலும் 2 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். அவர்கள் தமிழகத்தின் கோயமுத்தூரை சேர்ந்தவர்கள் என்றும், நஜீப் ராஜா, ஜாபர் சாதிக் என்று அழைக்கப்படும் இவர்கள் தற்போது அவர்கள் கேரளா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்