வாழ்க்கை கடினமானது! அவர் ஒரு அழகான ஆத்மா.. நெஞ்சு வலியால் கணவர் மருத்துவமனையில் உள்ள நிலையில் வனிதா உருக்கமான பதிவு

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
2484Shares

நடிகை வனிதாவின் கணவர் பீட்டர் பால் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கணவர் குறித்து உருக்கமான பதிவுகளை வனிதா வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஜயகுமாரின் மகளும் நடிகையுமான வனிதா ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற பின் இரண்டு மாதங்களுக்கு முன்னர் பீட்டர் பால் என்பவரை 3-வது திருமணம் செய்து கொண்டார்.

பீட்டர் பாலுக்கும் ஏற்கனவே திருமணமாகி மனைவியும், குழந்தையும் உள்ளனர். முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் வனிதாவை மணந்ததாக சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பீட்டர் பாலுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அவர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சூழலில் வனிதா டுவிட்டரில் கணவர் தொடர்பில் பதிவுகளை வெளியிட்டுள்ளார்.

அதில், சொல்ல நிறைய இருக்கிறது... ஒன்றும் என்னால் முடியவில்லை. கடவுள் மிகப்பெரியவர்.. நம்புங்கள்.. எல்லாமே ஒரு காரணத்திற்காகத்தான் நடக்கிறது. வாழ்க்கை கடினமானதே... எதிர்கொள்ளுங்கள்... எல்லாமே சரியாகும்., கஷ்டத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்,, திருப்பி அடியுங்கள்... இந்த உலகுக்கு உங்களால் முடிந்தால் காட்டுங்கள் என பதிவிட்டுள்ளார்.

மற்றொரு பதிவில், திருமணம் என்பது நீங்கள் திருமணம் செய்து கொண்டீர்கள் என்று சொல்ல ஒரு சட்ட ஆவணம் மட்டுமல்ல.. திருமணம் என்பது இரு இதயங்களின் ஒன்றிணைவு மற்றும் வாழ்க்கையை ஒன்றாகக் கொண்டாடுவது.

பீட்டர் பாலும் நானும் பல உணர்ச்சிகளை 2020 இல் ஒன்றாக எதிர்கொண்டோம் .. நாங்கள் சிரித்தோம், நாங்கள் போராடினோம், நாங்கள் நேசித்தோம் , நாங்கள் அழுதோம்..ஒரு கொரோனாவோ அல்லது வெறுப்பவர்களோ எங்களை ஒதுக்கி வைக்க முடியாது.

நேற்று எங்களுக்கு ஒருபோதும் மறக்க முடியாத ஒரு மிக முக்கியமான நாள்.

நாங்கள் ஒன்றாக எதிர்கொள்ள கடவுள் சவாலை கொடுத்துள்ளார், அதுவும் எங்கள் அன்பின் வலிமையை சோதிக்க தான். அற்புதங்களை நான் நம்புகிறேன்

எங்களைச் சுற்றியுள்ள அனைத்து குழப்பங்களுக்கும் மத்தியில் நாங்கள் ஜூன் 27, 2020 அன்று மோதிரங்களை பரிமாறிக்கொண்டோம், பீட்டர் பால் ஒரு அழகான ஆத்மா, அவர் விரைவில் உங்கள் இதயங்களை வெல்வார் அவர் சாதிக்கப் பிறந்தார் என்று எனக்குத் தெரியும், நீங்கள் விரைவில் புரிந்துகொள்வீர்கள்.

எங்களைப் பற்றி அக்கறை கொண்ட அழகான ஆத்மாக்களுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்