SPB-ஐ காப்பாற்றுவது கடினம்: பிரபல மருத்துவர் அளித்துள்ள பேட்டி

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

பாடகர் எஸ்பிபியை காப்பாற்றுவது கடினம் என மருத்துவர் பூபதி ஜான் கூறியுள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி சென்னையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு கொரோனா நெகடிவ் வந்ததாக மகன் சரண் தெரிவித்திருந்தார்.

ஆனாலும் தொடர்ந்து வெண்டிலேட்டர் மற்றும் எக்கோ மூலம் எஸ்.பி.பிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் எஸ்பிபியின் உடல்நிலை மிக மோசமாக உள்ளது என தெரிவித்திருந்தது.

இது தொடர்பில் பேசிய மருத்துவர் பூபதி ஜான், கொரோனா பாதிப்பு 65 வயதை கடந்தவர்களை தான் அதிகம் பாதிக்கிறது.

மேலும் சர்க்கரை வியாதி, இரத்த கொதிப்பு போன்ற நோய்கள் உள்ளவர்களை அதிகம் பாதிக்கிறது.

எஸ்பிபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது சாதாரண அறிகுறியுடன் உள்ளே என கூறியிருந்தார்.

ஆனால் இந்த நோயின் தன்மையே வேறு, அதாவது சளி, இருமல், ஜுரம் போன்ற சாதாரண அறிகுறி தான் முதலில் தெரியும்.

7 நாளுக்கு இப்படி தான் இருக்கும், 8வது நாளில் இருந்து தான் உடலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.

அப்படி தான் எஸ்பிபி ஆரம்பத்தில் நன்றாக இருந்தாலும் பின்னர் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதோடு உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டது.

நுரையீரலில் தொற்று அதிகரித்தால் தான் எக்மோ சிகிச்சை அளிக்கப்படும், அந்த நிலை தான் எஸ்பிபிக்கு ஏற்பட்டது.

இதன்பின்னரும் உடல் நிலை மோசமாகி பல உடல் உறுப்புகள் செயலிழக்கும் multi organ failure நிலைக்கு வந்துவிட்டது, இதனால் அவரை காப்பாற்றுவது கடினம் என கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்