பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் இறுதிச்சடங்கின் போது, தாய் கண்கலங்கிய போது மகன் சரண் அவரை கட்டியணைத்து ஆறுதல் சொன்ன புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த மாதம் கொரோனா வைரஸின் லேசான அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி.பி, அதன் பின் அதில் இருந்து மீண்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
இதையடுத்து நேற்று முன் தினம் மதியம் சிகிச்சை பலனின்றி எஸ்.பி.பி உயிரிழந்தார். அவரின் மரணம் திரையுலகில் மட்டுமின்றி ரசிகர்கள் பலரையும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில், எஸ்.பி.பி இறுதிச்சடங்கில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

அதில், ஒரு கட்டத்தில், தாய் எஸ்.பி.பியின் உடலைப் பார்த்து கண்கலங்க, உடனே அருகில் இருந்த மகன் சரண் அவரை கட்டியணைத்து ஆறுதல் சொல்கிறார். மேலும், சரண், தந்தை எஸ்.பி.பிக்கு நினைவு இல்லம் விரைவில் கட்டப்படும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

