சிகிச்சைக்கு பின் முதன் முறையாக நடிகர் ரஜினி பேசிய வீடியோ! உடல் நிலை குறித்து அவரே சொன்ன தகவல்

Report Print Santhan in பொழுதுபோக்கு
605Shares

நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் சிகிச்சை பெற்று வந்து, வீடு திரும்பிய நிலையில் தற்போது அவர் அப்பல்லோ மருத்துவர் ஊழியர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஹைதராபாத்திற்கு படிபிடிப்பிற்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த், அங்கு படப்பிடிப்பு ஊழியர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் அந்த படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இதையடுத்து நடிகர் ரஜினி சிறிய உடல்நலப் பிரச்சனைகளால் அங்கிருக்கும் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின் வீடு திரும்பிய அவர், உடல்நலப் பிரச்சனைகள் காரணமாக அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

ஆனால், வெளிப்படையாக செயதியாளர்களை சந்திக்காமல் இருந்தார்.

இந்நிலையில், தற்போது அவர் அப்பல்லோ ஊழியர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறிய வீடியோவை மருத்துவமனை நிர்வாகம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அதில், கடவுள் அருளால் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். உங்கள் சேவை மிகவும் சிறப்பானதாக இருந்தது' என்று கூறியதுடன் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவில் அவர் நான் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக கூறினாலும், அவரைப் பார்க்கும் போது கொஞ்சம் சோர்வுடனே காணப்படுவதாக இணையவாசிகள் பலரும் கூறி வருகின்றனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்