சொத்தில் ஒரு பங்கை விற்றிருந்தால் கூட இந்த முடிவு வந்திருக்காதே? மலைக்க வைத்த Cafe Day நிறுவனர் சித்தார்த்தாவின் சொத்து மதிப்பு!

Report Print Santhan in தொழிலதிபர்

கோடீஸ்வரரான காபி டே நிறுவனர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

கர்நாடக மாநில முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் தான் சித்தார்த்தா. தொழில் அதிபரும், மிகவும் பிரபலமான கபே காபி டேநிறுவனருமான சித்தார்த்தா திடீரென மாயமானார்.

இவர் கடன் பிரச்சனை காரணமாக மாயமாகியிருக்கலாம் என்று தகவல்கள் வெளியான நிலையில், அவர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும், அவருக்கு 8 ஆயிரம் கோடி ரூபாய் கடன் இருப்பதாக கூறி அவர் ஒவ்வொரு வங்கியிடமு எவ்வளவு கடன் வாங்கியிருந்தார் என்ற தகவல் வெளியானது.

அதில்,மொத்தம் 24 வங்கிகளில் இருந்து சித்தார்த்தா 8 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றிருக்கிறார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இப்படி 8 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியிருக்கும் சித்தார்த்தாவின் சொத்து மதிப்பு, 24 ஆயிரம் கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. இதில் அவர் ஒரு மடங்கை மட்டும் விற்றிருந்தால் கூட இவர் இந்த முடிவை எடுத்திருக்க தேவையில்லை.

ஆனால் கடன் பிரச்சினை, மனவேதனை, கடன் கொடுத்தவர்கள் தரும் தொந்தரவுகளால், மிகுந்த மன அழுத்ததிற்குள்ளானதன் காரணமாகவே இவர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

இவ்வளவு கடன் பிரச்சினையில் சிக்கித் தவித்த சித்தார்த்தா உலகம் முழுவதும் கிளைகளை கொண்டுள்ள தனக்கு சொந்தமான 12 ஆயிரம் ஏக்கர் காபி எஸ்டேட் மூலம் கடந்த 2015-ம் ஆண்டு 8,200 கோடி லாபம் ஈட்டி இருந்தார்.

இதனால் அவர் அந்த ஆண்டு போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட மிகச்சிறந்த தொழில் அதிபர்களின் பட்டியலில் சிறப்பிடம் பிடித்திருந்து குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers