ரூ.120 சம்பாதித்த சிறுவன் இன்று பல கோடி சம்பாதிக்கும் தொழிலதிபர்

Report Print Gokulan Gokulan in தொழிலதிபர்

12ம் வகுப்பு வரை படித்து இன்று பல 100 கோடிகளை சம்பாதித்து இளைஞர்களுக்கு உந்துதலாய் மாறியிருக்கிறார் கிறிஸ்டோபர்.

சின்ன வயதில் தந்தையை இழந்த கிரிஸ்டோபர் தாயின் அரவணைப்பில் வளர்ந்தார். தாய் ஒரு பள்ளி ஆசிரியை.

மாதம் ரூ.1500தான் சம்பளம். இதனால் குடும்பத்தை நடத்த சிரமப்பட்ட தாய்க்கு கிரிஸ்டோபர் சின்ன வயதிலேயே சிறு சிறு உதவிகளை செய்து வந்தார்.

வறுமை நிலையிலும் படித்து 10ம் வகுப்பிற்கு சென்றார். 10ம் வகுப்பு படிக்கும்போதே இரண்டு வேளையும் வேலை பார்த்தார். காலையில் செய்தித்தாள் விநியோகம் செய்வார். மாலையில் ஐஸ்கிரீம் கடையில் வேலை பார்த்தார்.

10ம் வகுப்பு முடித்த பிறகு செய்திதாளை விற்பனை நிறுத்தி விட்டு, காலையில் பால் விநியோகம் செய்ய ஆரம்பித்தார். மாலையில் பெங்களுரில் டைமண்ட் டிஸ்டிரிக்டில் என்ற இடத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்தார்.

12 வரைதான் என்னால் படிக்க முடிந்தது. வாழ்க்கையே எனக்கு இல்லை யென்று நினைத்துக் கொண்டிருக்கும் போது, என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பிக் கொண்டிருந்தார்.

அப்போதுதான் அவர் வசிக்கும் பகுதியில் +2 படித்த மாணவர்களுக்கு இலவச 3 மாதங்களில் கணினி தொடர்பான பயிற்சி வழங்கப்படுகிறது என்பதை அறிந்து அந்த பயிற்சி கூடத்தில் சென்று கற்றார்.

கணினி படிப்பை முடித்த பின்பு செட் கரீயர் அக்காடமி அவரை வேலைக்கு அழைத்தது, அங்கு கிரிஸ்டோபர் 2 வருடங்கள் வேலை செய்து வந்தார். பல தொழில்நுட்பங்களை C, C++, மற்றும் பல கணினி மொழிகளை கற்றுக்கொண்டார்.

அவருக்கு நிறுவனத்தில் இருந்த நண்பர்கள் இவருக்கு புத்தகங்களை அளித்தனர். அதனை படித்து, தகவல் தொழில் நுட்பத் துறையை அவர் தேர்வு செய்தார். அதில் ஒப்பந்தப் பணியாளராக பல இடங்களில் பணியாற்றினார்.

அதன் மூலம் சிங்கப்பூரில் டாமினோஸ் பீஸ்சாவுக்கு வணிக நுட்பம் தொடர்பான பணியும் செய்து வந்தார்.

வணிக நுட்பம் மற்றும் பகுப்பாய்வு துறை மிகவும் அவருக்கு பரிச்சையமான துறைகளாக மாறின.

அந்த நேரத்தில் தனியாக பணியாற்றினால் சிறப்பாக பணியாற்ற முடியும் என்று நினைத்த கிரிஸ்டோபர், பகுதி நேர பணியாளராக தனது பணியை தானே முடிவு செய்யும் விதத்தில் தனது வேலைகளை அமைத்துக் கொண்டார்.

தொடர்ந்து பல ஐடி நிறுவனங்களுக்கு ஆலோசகராக பணியாற்ற ஒரு நாளில் 3000 ரூபாய் சம்பாதிப்பதில் இருந்து, படிப்படியாக முன்னேறி, ஒரு நாளில் 75000 ரூபாய் வரை சம்பளமாக பெற்றார்.

தொடர்ந்து 2009ல் சிஆர் பி ஐ கன்சல்டன்சி உருவானது, தனி ஆளாக நிறுவனத்தை நடத்தி வந்த கிறிஸ்டோபர் படிப்படியாக அயராத உழைப்பினால் முன்னேறினார்.

வாடிக்கையாளர்களும் அதிகரிக்க இப்பொழுது அந்நிறுவனத்தில் 850 பணியாளர்கள் உள்ளனர். அதில் 450 பேர் முழு நேர பணியாளர்கள், மற்றவர்கள் ஒப்பந்த அடிப்படையிலான பிபிஓ பணியாளர்கள்.

சேவை நோக்கத்துடன் வாடிக்கையாளர்களின் நலன்களையும் கருத்தில் கொண்டதால் இன்று நூற்றுக்கணக்கான கோடிகளை வருமானமாக ஈட்டுகிறார்.

2019 ஆம் ஆண்டில் சிறந்த மைக்ரோசாப்ட் பார்ட்னர் என்ற விருதை வென்றுள்ளது G7 சிஆர்.

தன்னம்பிக்கையோடு போராடினால் வெற்றி நிச்சயம் என்பதற்கு இவரே சான்று.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்