இந்த ஒரு மீனை மட்டும் சாப்பிட்டால் போதும்... உடலில் எந்த நோயும் வராது

Report Print Jayapradha in உணவு

மனித மூளையின் பல்வேறு செயற்பாடுகளுக்கு அவசியத்தேவையாக இருக்கும் கொழுப்பு அமிலங்கள் மீன்களில் அதிக அளவு இருக்கின்றன.

மேலும் மீன் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. அதிலும் மீன்களில் குறைந்த விளையில் கிடைக்கும் நெத்திலி மீன் சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.

சரும ஆரோக்கியம்

தினமும் நெத்திலி மீனை உணவில் சேர்த்து வந்தால் அதில் உள்ள வைட்டமின் ஈ, செலினியம் போன்றவை சருமத்தின் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களை தருவதொடு சருமம் பொலிவோடு இருக்க உதவுகின்றன.

பற்கள் மற்றும் எலும்புகள்

பற்கள் மற்றும் எலும்புகளுக்கு மிகவும் அத்தியாவசியமான ஓர் சத்ட்தான கால்சியம் இந்த மீனில் உள்ளது. மேலும் இதில் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வைட்டமின் ஏ சத்தும் உள்ளது.

கண் பார்வை

கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வைட்டமின் ஏ சத்து வளமாக நெத்திலி மீனில் நிறைந்துள்ளது. எனவே இவற்றை வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், கண் பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

நினைவாற்றல்

தினமும் தொடர்ந்து மீன் உட்கொள்ளுதல் அறிவாற்றலை அதிகரித்து பல்வேறு நோய்கள் மற்றும் குறைபாடுகளைத்தவிர்க்க வழிசெய்கிறது.

மூளை வளர்ச்சிக்கு

மீன்களில் நிறைந்திருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும் நல்ல பார்வைத்திறனுக்கும் உதவுகிறது.

இதய ஆரோக்கியம்

நெத்திலி மீனில் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பாலி-அன்-சாச்சுரேட்டட்ஃபேட்டி அமிலம் அதிகம் உள்ளது. மேலும் இதனை சாப்பிடுவதின் மூலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் அளவு குறைந்து இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு குறையும்.

இருதய நோய்

மீன் உண்ணும் பழக்கம் இரத்த உறைவைக் குறைப்பதால் இருதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கிறது.

புற்றுநோய்

மீன்களில் நிறைந்துள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் வாய், உணவுக்குழாய், பெருங்குடல், கர்ப்பப்பை, மார்பகம் மற்றும் புரோஸ்டேட் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை 30 முதல் 50 சதவீதம் வரையிலும் குறைக்கிறது.

இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்க

மீன்களில் அடங்கியுள்ள கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மக்னீஷியம் ஆகிய தாதுச்சத்துக்கள் எலும்பு வளர்ச்சிக்கும், இரும்புச்சத்து இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்க உதவுகின்றன

கர்ப்பிணி பெண்களுக்கு

பெண்கள் கர்ப்பகாலத்தில் மீன் உண்ணுவதால் குறைப்பிரசவத்தை தவிர்க்கலாம். தாய்ப்பாலை அதிகரிக்கவும், தாயின் எலும்புகளுக்கு வலு சேர்க்கவும்கூட மீன் உணவு பயன்படுகிறது.

மன அழுத்தம் குறைய

மீன்களில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது அதை உட்கொள்ளும் வயோதிகர்களுக்கு மனஅழுத்தத்தை குறைக்கிறது.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers