உலகக் கிண்ண கால்பந்து தொடர்: எந்தெந்த நாடுகளில் என்ன சேனல்களில் நேரடி ஒளிபரப்பு தெரியுமா?

Report Print Kabilan in கால்பந்து
434Shares
434Shares
ibctamil.com

உலகக் கிண்ண கால்பந்து தொடர் இன்று துவங்க உள்ள நிலையில், எந்தெந்த நாடுகளில் எந்தெந்த சேனல்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்று பார்ப்போம்.

21வது உலகக் கிண்ண கால்பந்து தொடர் ரஷ்யாவில் இன்று துவங்க உள்ளது. தொடக்க ஆட்டத்தில் ரஷ்யா மற்றும் சவுதி அரேபியா நாடுகள் மோத உள்ளன.

இந்நிலையில், எந்தெந்த நாடுகளில் எந்தெந்த சேனல்களில் இந்த போட்டித் தொடர் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்பது குறித்து காண்போம்.

ஐரோப்பா

ஐரோப்பியா நாடுகளான பிரான்ஸ், ஜேர்மனி, சுவிட்ஸர்லாந்து உட்பட அனைத்து நாடுகளிலும் Fox Sports, BBC, ITV ஆகிய சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

பிரித்தானியா

அதேபோல் பிரித்தானியாவிலும் Fox Sports, BBC, ITV ஆகிய சேனல்களே நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

அமெரிக்காவில் Fox Sports சேனலும், கனடாவில் CBC, Fox Sports சேனல்களும் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

ஆசியா

ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகளான இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளில் சோனி பிக்சர்ஸ் நிறுவனம் கால்பந்து தொடரை நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

சிங்கப்பூர், மியன்மர், மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் Fox Sports Asia நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

சீனாவில் உள்ள சீன சேனல்களான CCTV5 மற்றும் CCTV ஆகியவை நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. இந்தோனேஷியாவில் Trans Tv எனும் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

அர்ஜெண்டினாவில் Canal 9, EI trece, TV Publica, America TV ஆகிய சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

பிரேசிலில் Sports TV, RedeGlobo ஆகிய சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்