மக்களின் விருப்பத்திற்குரிய உதைபந்தாட்ட வீரனாக தெரிவு செய்யப்பட்ட யாழ் வீரன் யார் தெரியுமா?

Report Print Samaran Samaran in கால்பந்து
33Shares
33Shares
ibctamil.com

அரியாலை சரஸ்வதி விளையாட்டுக்கழகம் நடத்தி வரும் வடக்கின் கில்லாடியின், மக்கள் மனம் கவர்ந்த வீரனாக ஊரெழு றோயல் அணியின் தர்மகுலநாதன் கஜகோபன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அரியாலை சரஸ்வதி விளையாட்டுக்கழகம் தமது நூற்றாண்டு விழாவையொட்டி ‘வடக்கின் கில்லாடி யார்” என்னும் கால்ப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியொன்றை அரியாலை கால்ப்பந்தாட்ட பயிற்சி மைதானத்தில் நடத்தி வருகின்றது.

போட்டிகள் ஒருபக்கம் நடக்க, போட்டிகளில் பங்குபற்றும் அணிகளில் எந்த வீரரை ரசிகர்களுக்கு அதிகம் பிடிக்கும் என்னும் முகப்புத்தகத்தின் ஊடாக வாக்களிக்கும் போட்டியொன்றையும் செப்ரெம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் அரியாலை சரஸ்வதி விளையாட்டுக்கழகம் நடத்தியது.

வாக்களிப்பு ஆரம்பித்த நாள் முதல் றோயல் அணியின் கஜகோபனுக்கும் குருநகர் பாடும் அணியின் கீதனுக்கும் இடையில் கடும் போட்டி நிலவியது.

அதற்கு பின்னர் எந்த வீரருக்கும் இவர்கள் அளவுக்கு இணையான வாக்குகள் விழவில்லை.

இறுதி வரையில் இவர்களுக்கிடையில் கடுமையான போட்டி நிலவியபோதும், தொடர்ந்தும் கஜகோபன் முன்னிலை வகித்தார்.

7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 4 வரையில் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் வாக்களிப்பு முடிவடைந்து, வாக்குகள் எண்ணப்பட்டதில், ஊரெழு றோயல் அணியின் கஜகோபன் 3031 வாக்குகள் பெற்று முதலிடத்தைப் பெற்று, மக்கள் மனம் கவர்ந்த வீரராகத் தெரிவாகியுள்ளார்.

இவருக்கான விருது, வடக்கின் கில்லாடி இறுதிப்போட்டியில் வைத்து வழங்கப்படவுள்ளது.

2827 வாக்குகள் பெற்று கீதன் இரண்டாமிடத்தைப் பெற்றார்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்