பிரான்ஸ் தமிழர் உதைபந்தாட்டத் தொடரில் மூன்றாம் இடத்தை தனதாக்கிய நவிண்டில் கலைமதி அணி

Report Print Samaran Samaran in கால்பந்து

பிரான்ஸ் தமிழர் உதைபந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில், வலிகாமம் லீக் ஒழுங்கமைந்து நடத்திய கால்ப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியானது இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி மற்றும் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மைதானங்களில் நடைபெற்றது.

இந்தச் சுற்றுப்போட்டியில் வடமாகாணம் தழுவிய வகையில் நடைபெற்றதுடன், 24 அணிகள் பங்குபற்றியிருந்தன.

இந்தச் சுற்றுப்போட்டியின் 3 ஆம் இடத்துக்கான ஆட்டம் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது.

நவிண்டில் கலைமதி அணியை எதிர்த்து நாவாந்துறை சென்.லூட்ஸ் அணி மோதியது. கலைமதி அணி, 02:00 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers