பிரான்ஸை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Report Print Arbin Arbin in பிரான்ஸ்
682Shares
682Shares
ibctamil.com

பிரான்சில் 5 வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் அதன் தாயார் மற்றும் அவரது முன்னாள் துணைவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு Cecile Bourgeon(30) என்பவர் தமது 5 வயது மகள் மாயமானதாகவும், பொதுமக்கள் உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

மாயமான சிறுமியை பொலிசாரும் தீவிரமாக தேடி வந்த நிலையில், 4 மாதங்கள் கடந்து செசில் மற்றும் அவரது முன்னாள் துணைவர் Berkane Makhlouf ஆகிய இருவரும் அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளனர்.

அதில், குடியிருப்பில் நடந்த ஒரு அசம்பாவிதத்தில் சிறுமி கொல்லப்பட்டதாகவும், பொலிசாருக்கும் சமூகத்திற்கும் பயந்து, சிறுமியின் உடலை அருகாமையில் உள்ள வனப்பகுதியில் மறைவு செய்ததாகவும் பகீர் தகவலை வெளியிட்டனர்.

இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு கீழ் நிலை நீதிமன்றம் கொல்லப்பட்ட சிறுமியின் தாயார் செசிலுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், அவரது முன்னாள் துணைவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கியது.

தொடர்ந்து 2 வார கால மேல்முறையீட்டு நடவடிக்கையில் நீதிமன்றம் குறித்த தாயாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

சிறுமி பியோனா கடுமையான சித்திரவதைக்கு பின்னரே கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும், ஆனால் ஆதாரங்கள் அனைத்தையும் இருவரும் மறைத்துள்ளதையும் நீதிமன்ற விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்