இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளும் பிரான்ஸ் ஜனாதிபதி

Report Print Kabilan in பிரான்ஸ்
127Shares
127Shares
lankasrimarket.com

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான், நான்கு நாள் அரசுமுறை பயணமாக இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார்.

மார்ச் 9ஆம் திகதி ஜனாதிபதியுடன் அவரது மனைவி, தொழில் அதிபர்கள், அமைச்சக அதிகாரிகள் வரவுள்ளனர்.

இந்திய வெளியுறவு அமைச்சகம் இதுகுறித்து கூறுகையில், ‘பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரான் இந்தியா வர உள்ளார்.

இரு நாடுகள் இடையேயான பொருளாதாரம், அரசியல் உறவுகளை மேம்படுத்தும் விதமாக மெக்ரானின் வருகை அமையும்’ என தெரிவித்துள்ளது.

முதற்கட்டமாக டெல்லி செல்ல உள்ள மேக்ரான், அதன் பிறகு ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் 121 நாடுகளை உள்ளடக்கிய, சர்வதேச சூரிய ஒளி உற்பத்தி கூட்டமைப்பின் மாநாட்டில், மோடியுடன் இணைந்து பங்கேற்க உள்ளார்.

அதனைத் தொடர்ந்து, பயணத்தின் கடைசி நாளில் வாரணாசி செல்லும் மேக்ரான், மிர்சாபூரில் உள்ள 75 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி உற்பத்தி உலையை தொடங்கி வைக்கிறார்.

இந்த பயணத்தில் அணு சக்தி ஒத்துழைப்பு, கடல் சார் ஒத்துழைப்பு, விண்வெளி, ஆற்றல் சார் துறைகள், தீவிரவாதம், பருவநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரான்ஸின் ஜனாதிபதியாக பதவியேற்ற பின், இம்மானுவேல் மேக்ரான் முதன் முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

AFP

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்