பிரான்சில் குழந்தைகளுக்கு இந்த பெயர் சூட்ட நீதிமன்றம் தடை

Report Print Arbin Arbin in பிரான்ஸ்
892Shares
892Shares
lankasrimarket.com

பிரான்ஸில் பிறக்கும் குழந்தைகளுக்கு Liam என்ற பெயரைச் சூட்ட நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

பிரான்ஸில் Liam என்ற பெயர் பாலின குழப்பத்தை ஏற்படுத்தும் என கூறி, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அந்த பெயரைச் சூட்ட நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

பிரான்ஸின் Brittany பகுதியில் குடியிருக்கும் பெற்றோர், கடந்த நவம்பர் மாதம் பிறந்த தங்கள் மகளுக்கு Liam என்ற பெயரைச் சூட்ட முடிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

ஆனால் அதற்கு அதிகாரிகள் தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், பாலின குழப்பம் ஏற்படாத பெயர் ஒன்றை தெரிவு செய்யவும் அதிகாரிகளால் அந்த தாயார் நிர்பந்திக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து நீதிமன்றத்தை நாடிய குறித்த பெற்றோர் இந்த விவகாரம் தொடர்பில் முறையிட்டுள்ளனர்.

ஆனால் நீதிமன்றமும் குறித்த பெயரை தடை விதித்து பெற்றோரை கைவிட்டுள்ளது.

பிரான்ஸ் மட்டுமல்ல, உலகில் மேலும் சில நாடுகள் பிள்ளைகளுக்கு பெயர் சூட்டுவதில் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

சவுதி அரேபியா, நியூசிலாந்து, ஜேர்மனி, போர்த்துகல், டென்மார்க், நோர்வே, ஸ்வீடன், மொராக்கோ, ஜப்பான், மலேசியா மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் பிள்ளைகளுக்கு பெயர் சூட்டுவதில் குறிப்பிட்ட சட்ட வரைமுறைகளை பின்பற்றுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்