சிரியாவில் அமெரிக்க கூட்டுபடைகளின் தாக்குதல் எதிரொலி: அவசரமாக கூடும் ஐ.நா சபை

Report Print Athavan in பிரான்ஸ்
149Shares
149Shares
ibctamil.com

சிரியா மீது அமெரிக்க கூட்டுப்படைகள் வான்வழி தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து ரஷ்யாவின் கோரிக்கையால் ஐ.நா பாதுகாப்பு சபை இன்று அவசர அவசரமாக கூட்டப்படுகிறது.

சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் அமெரிக்கா தலைமையிலான கூட்டு படைகள் தாக்குதல் நடத்தின. இதனால் டமாஸ்கஸ் நகரம் குலுங்கியது.

இந்நிலையில், சிரியாவில் ரஷ்ய ராணுவம் முகாமிட்டிருப்பதால் அமெரிக்காவும் ரஷ்யாவும் நேரடி போரில் ஈடுபடும் அபாயம் எழுந்துள்ளது.

இந்த தாக்குதல் தொடர்பாக விவாதிப்பதற்காக ஐ.நா. பாதுகாப்பு சபையை அவசரமாக கூட்டுமாறு ரஷியா கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் இன்று ஐ.நா சபை கூடுகிறது.

ஐநா தடை செய்த ரசாயன ஆயுதங்களை சிரியா அரசு பயன்படுத்தி அப்பாவி மக்களை கொன்றது தொடர்பாக விவாதிக்க கடந்த 10-ம் தேதி ஐ.நா. பாதுகாப்பு சபையின் அவசர கூட்டம் நடைபெற்றது.

இவ்விவகாரம் தொடர்பாக ஆய்வு நடத்த சர்வதேச ரசாயன ஆயுத தடுப்பு முகமையை சேர்ந்த அதிகாரிகள் சிரியாவின் டூமா நகருக்கு நேரில் சென்று விசாரணை நடத்த வேண்டும் என்ற தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு சபையில் ரஷியா கொண்டுவந்தது.

ஆனால் ஐ.நா. பாதுகாப்பு சபையில் உள்ள 15 நாடுகளில் 9 நாடுகள் ஒரு தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தால்தான் அந்த தீர்மானம் நிறைவேறியதாக கருதப்படும்.

இந்நிலையில் ரஷியாவின் தீர்மானத்துக்கு ஆதரவாக ஏழு வாக்குகள் மட்டுமே கிடைத்ததால் ரஷியா இயற்றிய இந்த தீர்மானம் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, சிரியாவின் மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் விமானப்படைகள் இன்று காலை அடுத்தடுத்து ஏவுகணைகள வீசி தாக்குல் நடத்தின.

இந்நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக விவாதிப்பதற்காக ஐ.நா. பாதுகாப்பு சபையை அவசரமாக கூட்டுமாறு ரஷியா கேட்டுக் கொண்டது. இதையடுத்து இன்றைய தினம் ஐநா பாதுகாப்பு சபை அவசரமாக கூடுகிறது.

இந்த கூட்டத்தில் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்ட்டனியோ குட்டரெஸ் உரையாற்றவுள்ளதாக ஐ.நா. தலைமயகம் தெரிவித்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்