பிரான்சில் திடீர் துப்பாக்கிச்சூடு : ஒருவர் காயம்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சின் Marseille பகுதியில் தலையை மறைக்கும் வகையில் உடையணிந்த சிலர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

‘La Busserine’ என்னும் கலாச்சார மையத்தினருகே நின்றுகொண்டிருந்த ஒரு கூட்டம் இளைஞர்கள்மீது தானியங்கித் துப்பாக்கிகளுடன் வந்த சிலர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

பொலிசார் சம்பவ இடத்திற்கு வரும்போது அவர்களை சந்தேகத்திற்குரிய சில நபர்கள் வழிமறித்தனர்.

பொலிசாருடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்ட அந்த நபர்கள் பின்னர் சம்பவ இடத்தை விட்டு ஓட்டம் பிடித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்பட்டார்களா என்பது குறித்து எதுவும் தெரியவில்லை.

பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் துப்பாக்கியின் பின் பக்கத்தால் தாக்கப்பட்ட ஒருவருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது.

சம்பவம் நிகழ்ந்தபோது தீயணைப்புப் படையினரும் சம்பவ இடத்தில் இருந்தனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்