பிரான்சில் தூங்கிய காதலனை சுட்டுகொன்ற காதலி: 3 ஆண்டுகளுக்கு பின் அம்பலமான சம்பவம்

Report Print Arbin Arbin in பிரான்ஸ்
136Shares
136Shares
ibctamil.com

பிரான்சில் தொடர்ந்து சித்திரவதைக்கு உட்படுத்திய காதலனை தூக்கத்தில் சுட்டுக்கொன்ற காதலிக்கு 3 ஆண்டுகளுக்கு பின்னர் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரான்சின் பிரிட்டானி நகரில் உள்ள Vannes பகுதியில் குறித்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் 27 வயது Emilie Tobie என்பவரை கைது செய்துள்ள பொலிசார் அவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுத்தந்துள்ளனர்.

முன்னாள் கடற்படை அதிகாரியான 35 வயது Yann Bachelot தமது காதலி Emilie Tobie என்பவரை தொடர்ந்து சித்திரவதைக்கு இரையாக்கி வந்துள்ளார்.

ஒருமுறை தமது காதலியை 8 நாட்கள் அறையில் வைத்து பூட்டி, அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தகவல் பரப்பியுள்ளார்.

மேலும் துப்பாக்கியை காட்டி மிரட்டி கொலை செய்து விடுவதாகவும் பயமுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

தொடர் சித்திரவதையை தாங்க முடியாத நிலையில், தமது உயிருக்கு அச்சுறுத்தல் என உணர்ந்த Emilie Tobie, சம்பவத்தன்று தூக்கத்தில் இருந்த Yann Bachelot-ஐ தலையில் சுட்டு கொலை செய்துள்ளார்.

பின்னர் குளியலறை திரையால் உடலைப் பொதிந்து கழிவறையிலேயே வைத்து பூட்டியுள்ளார்.

தமது காதலர் தொடர்பில் விசாரித்த நண்பர்களுக்கு அவர் ஸ்பெயின் நாட்டுக்கு சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு குறித்த குடியிருப்பின் உரிமையாளர் வாடகை தராத காரத்தால் குடியிருப்பை திறந்து பார்க்க முடிவு செய்துள்ளார்.

உள்ளே சென்ற ஊழியர்கள் ஒரே ஒரு கழிவறை மட்டும் மிகவும் எச்சரிக்கையுடன் மூடப்பட்டுள்ளதை கவனித்துள்ளனர்.

இதனையடுத்து கழிவறையை உடைத்து உள்ளே சென்றவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. உள்ளே அழுகிய நிலையில் சடலம் ஒன்றின் எச்சங்கள் கிடந்துள்ளது.

இதனையடுத்து பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு, அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் Emilie Tobie சிக்கியுள்ளார்.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்ட அவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்