பிரான்ஸ் ரயில்களில் ரகசிய பொலிசார்: அரசின் அதிரடி திட்டத்திற்கான காரணம்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
245Shares
245Shares
lankasrimarket.com

பிரான்ஸ் ரயில்களில் தீவிரவாத தாக்குதல்களை முறியடிக்க சாதாரண உடையில் ரகசிய பொலிசாரை நியமிக்கும் திட்டத்தை அரசு விரைவில் செயல்படுத்த உள்ளது.

அதிகரித்து வரும் தீவிரவாத அச்சுறுத்தல்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் "Train marshalls" என்று அழைக்கப்படும் இந்த தீவிரவாத எதிர்ப்பு ரகசிய பொலிசார் பிரான்ஸ் ரயில்களில் இனி எப்போதும் இருப்பார்கள்.

அமெரிக்காவில் விமானங்களில் பாதுகாப்புக்காக செயல்படும் Air Marshallகளைப்போல் இவர்கள் ரயில்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்படுவார்கள்.

ஆயுதம் தரித்திருந்தாலும் இவர்கள் சாதாரண உடையில்தான் பயணிப்பார்கள். சந்தேகத்திற்கிடமான வகையில் யாராவது பயணிக்கிறார்களா என்பதைக் கவனித்து தேவையானால் யாரும் அறியாதவண்ணம் அவர்களைக் கையாள வேண்டியது இவர்களது பணியாகும்.

2015ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆம்ஸ்டர்டாமுக்கும் பாரீஸுக்கும் இடையே செல்லும் அதிவேக Thalys நிறுவனத்தின் ரயில் ஒன்றை தீவிரவாதிகள் தாக்க முயன்றதையடுத்து ரயிலில் ரகசிய பொலிசாரை நியமிக்கும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதற்கிடையில் கடந்த வார இறுதியிலேயே சில Train marshallகள் தங்கள் பணியைத் தொடங்கிவிட்டார்கள்.

Mathieu என்னும் Train marshall கூறும்போது அவர் ஏற்கனவே 20 பயணங்களில் ஒரு சாதாரண பயணியைப் போல் பயணித்து விட்டதாகக் கூறினார்.

காலை 8 மணிக்கு ரயிலில் ஏறினோமென்றால் ரயில் பிஸினஸ் செய்பவர்களால் நிரம்பியிருக்கும், அப்போது அதற்கேற்றாற்போல் உடையணிந்து கொள்வோம், விடுமுறை முடிந்து வீடு திரும்புபவர்களோடு பயணிக்கும்போது அதற்கேற்றாற்போல் உடையணிந்து கொள்வோம் என்றார் அவர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்