பாரிஸில் குடியிருப்பு பகுதிக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த நபர்: சுற்றிவளைத்த பொலிஸ்

Report Print Arbin Arbin in பிரான்ஸ்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் குடியிருப்பு பகுதிக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த நபரை பொலிசார் சுற்றிவளைத்து கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாரிஸின் 10 ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள Passage Brady குடியிருப்பு பகுதிக்குள் செவ்வாய்க்கிழமை ஆயுதங்களுடன் நபர் ஒருவர் நுழைந்ததாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார் குறித்த நபரை சுற்றிவளைத்துள்ளனர். அந்த நபர் அக்கட்டிடத்தின் 5-வது தளத்தில் குடியிருந்து வருவதாகவும்,

ஆயுதங்களுடன் நுழைந்ததாலையே பொலிசார் அவரை சுற்றி வளைத்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து மாலை சுமார் 6 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டுமின்றி அவரது அறையில் இருந்து பல ஆயுதங்களை கைப்பற்றியதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மதுபோதையில் இருந்த அந்த நபர் வானத்தை நோக்கி 5 முறை துப்பாக்கியால் சுட்டதாகவும், இதனால் பாதுகாப்பு கருதி, அக்கட்டிடத்தில் வசித்த பலர் வெளியேற்றப்பட்டுள்ளனர் எனவும், அப்பகுதியை சுற்றி போக்குவரத்து தடை செய்யப்பட்டது எனவும் தெரியவந்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers