பாரிஸில் சுற்றுலா பயணிகளின் விநோத புகார்: மேயரின் உணர்ச்சிமிக்க பதில்

Report Print Kabilan in பிரான்ஸ்
275Shares
275Shares
lankasrimarket.com

பிரான்சின் பாரிஸ் நகரில் பூச்சிகளின் சத்தம் தொந்தரவாக இருப்பதாக சுற்றுலா பயணிகள் புகார் தெரிவித்த நிலையில், அது தங்கள் பகுதியின் சங்கீதம் என நகர மேயர் பதிலளித்துள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் சுற்றுலா பயணிகளின் வருகை என்பது மிக அதிகம். அவ்வாறு பாரிஸின் பிக்சரெஸ்கியூ என்ற கிராமத்திற்கு வந்த சுற்றுலா பயணிகள் வித்தியாசமான புகார் ஒன்றை மேயரிடம் அளித்தனர்.

அதாவது, அப்பகுதியில் சுற்றித்திரியும் குறிப்பிட்ட வண்டு இன பூச்சிகள் அதிகம் சத்தம் எழுப்புவது தொந்தரவாக இருப்பதாக குறிப்பிட்டனர்.

அதனைத் தொடர்ந்து, சுற்றுலா பயணிகளுக்கு பதில் அளிக்கும் வகையில் மேயர் ஜியார்ஜஸ் பெர்ரேரோ வானொலியில் கருத்து தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘இந்த சப்தம் புதிதாக வந்த சுற்றுலா பயணிகளுக்கு தொந்தரவாக இருக்கலாம். ஆனால் இது இப்பகுதி மக்களின் சங்கீதம் என அவர்கள் உணரவில்லை.

சுற்றுலாப் பயணிகள் சில பூச்சி மருந்துகள் கொண்டு அவற்றை அகற்ற முயற்சிக்கிறார்கள். அது மிகவும் முட்டாள்தனமான விடயம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்