ஏஞ்சலா மெர்க்கலின் முடிவு மிகவும் மரியாதைக்குரியது: பாராட்டி தள்ளிய இம்மானுவல் மேக்ரான்

Report Print Kabilan in பிரான்ஸ்

ஜேர்மன் சான்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் பதவி விலக எடுத்திருக்கும் முடிவு மிகவும் மரியாதைக்குரியது என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரான் பாராட்டியுள்ளார்.

வரும் 2021ஆம் ஆண்டில் தனது சான்ஸலர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக, ஜேர்மனின் ஏஞ்சலா மெர்க்கல் அறிவித்துள்ளார்.

மெர்க்கலின் இந்த அறிவிப்பை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மெர்க்கல் பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘ஐரோப்பாவின் மதிப்பு என்ன என்பதை அவர் என்றும் மறந்ததில்லை.

அவர் மிகுந்த தைரியத்துடன் அவரது நாட்டை கொண்டு செல்கிறார். அதனால் தான் கூறுகிறேன் இது அவரது முடிவு மற்றும் மிகவும் மரியாதைக்குரிய அறிவிப்பு’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்