ஈபிள் கோபுர படிக்கட்டுகள் விற்பனைக்கு: பெரும் தொகைக்கு விலைபோனது

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பாரீஸின் பிரபல சுற்றுலாத்தலங்களில் ஒன்றான ஈபிள் கோபுரத்தின் படிக்கட்டுகள் ஏலம் விடப்பட்டன.

அதாவது ஈபிள் கோபுரம் நிர்மாணிக்கப்பட்டபோது முதன்முதலில் அமைக்கப்பட்ட சுழலும் படிக்கட்டுகளின் ஒரு பகுதி ஏலத்தில் விடப்பட்டது.

பிரான்சின் Artcurial என்னும் ஏல நிறுவனம் இந்த படிக்கட்டை ஏலத்தில் விட்டபோது, ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டத் தொகையைவிட மூன்று மடங்கு அதிக தொகைக்கு ஏலம் போனது.

நேற்று முன்தினம் ஏலத்தில் விடப்பட்ட அந்த படிக்கட்டு 169,000 யூரோக்களுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது.

மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த பெயர் வெளியிடப்படாத ஒருவர் அந்த படிக்கட்டுகளை ஏலத்தில் எடுத்தார்.

4.3 மீற்றர் உயரமும், 900 கிலோ எடையும் கொண்ட 129 ஆண்டு பழமையான அந்த படிக்கட்டில், 25 படிகள் உள்ளன.

கனடாவில் ஒருவரிடம் இருந்த அந்த படிக்கட்டு, ஈபிள் கோபுரத்தின் உச்சியில் இருக்கும் இரண்டு தளங்களை இணைத்த படிக்கட்டு ஆகும்.

1983ஆம் ஆண்டு அந்த இரண்டு தளங்களுக்கும் இடையில் லிஃப்ட் அமைக்கப்பட்டபோது, அகற்றப்பட்ட படிக்கட்டுகளின் 24 துண்டுகளில் இதுவும் ஒன்றாகும்.

அந்த படிக்கட்டின் இதர பாகங்கள், ஜப்பானின் Yoishii Foundation gardens, நியூயார்க்கின் சுதந்திர தேவி சிலைக்கருகில் உள்ள ஒரு இடம் மற்றும் புளோரிடாவிலுள்ள Disneyland ஆகிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers