மக்களை காப்பாற்ற உயிர் நீத்த பாரிஸ் வீரர்கள்: குவியும் நன்கொடை

Report Print Kabilan in பிரான்ஸ்
120Shares

பிரான்சின் பாரிஸ் நகரில் மக்களை காப்பாற்ற போராடிய தீயணைப்பு வீரர்கள் பலியான நிலையில், அவர்களது குடும்பத்தினருக்கு நன்கொடை சேகரிக்கப்பட்டு வருகிறது.

தீயணைப்பு வீரர்களான Nathanael Josselin மற்றும் Simon Cartannaz ஆகியோர், பாரிசின் Rue de Trevise, Saint-Cecile வீதியின் பேக்கரி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மக்களை காப்பாற்றும் போராட்டத்தில் பலியாகினர்.

இவர்களுடன் மேலும் இரண்டு பெண்களும் பலியாகியிருந்தனர். இந்நிலையில் பலியான வீரர்களுக்கு பாரிஸ் தீயணைப்பு துறை அஞ்சலி செலுத்தியுள்ளது.

அத்துடன் அவர்களது குடும்பத்தினருக்கு தங்களது இரங்கலையும் தெரிவித்தது. தற்போது இரு தீயணைப்பு படையினரின் குடும்பத்துக்கும் நன்கொடை கோரி சேகரிக்கப்பட்டு வருகிறது.

நன்கொடை சேகரிக்கப்பட்ட சில மணி நேரங்களில் 73,000 யூரோக்கள் சேர்ந்ததாகவும், அடுத்து வரும் நாட்களில் இது மேலும் அதிகரிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேக்கரி விபத்தில் 50 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்