650,000 யூரோக்களா? பிரான்சில் காதலர் தினத்தில் வைக்கப்பட்ட ராட்சத இதயத்தால் சர்ச்சை

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் காதலர் தினத்திற்காக அமைக்கப்பட்ட ராட்சத இதயம், மிக அதிகளவிலான நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசின் 18-ஆம் வட்டாரத்தில் உள்ள Porte de Clignancourt அருகே காதலர் தினத்தன்று ராட்சத இதயம் ஒன்று அமைக்கப்பட்டது.

9 மீற்றர் இருந்த இந்த இதயம் பரிஸ் நகரின் காதலை பறைசாற்றுவதாக தெரிவிக்கப்பட்டது.

இது இப்போது ஒரு சர்ச்சையை கிளப்பி உள்ளது. ஏனெனில், இந்த இதயம் நிறுவதற்கு 650,000 யூரோக்கள் செலவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்களின் வரிப்பணத்தில் இந்த சிலை நிறுவியிருப்பது கண்டனத்துக்குரியது என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்த இதயம் 38,000 சிறிய ரக மண்பாண்ட ஓடுகளால் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers