அபிநந்தன் விடுவிக்கப்பட்ட சில நிமிடங்களில் புல்வாமா தாக்குதல் தொடர்பில் பிரான்ஸ் அதிரடி!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் விடுவிக்கப்பட்ட சில நிமிடங்களில், புல்வாமா தாக்குதலுக்குக் காரணமானவர்களின் பட்டியலை ஐக்கிய நாடுகள் சபையில் வெளியிட இருப்பதாக பிரான்ஸ் அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நேற்றிரவு, தீவிரவாதத்திற்கெதிராக அனைத்து வகையிலும் போராடும் இந்தியாவுக்கு தனது ஆதரவை தெரிவித்துக் கொண்ட பிரான்ஸ், இந்திய விமானப்படை விமானி அபிநந்தனை பாகிஸ்தான் ஒப்படைத்த சில நிமிடங்களில், புல்வாமா தாக்குதலுக்கு காரணமான அனைவர் மீதும் ஐக்கிய நாடுகள் சபை தடைகள் விதிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க இருப்பதாக அறிவித்தது.

ஐரோப்பிய அமைச்சரும் வெளி விவகாரத்துறை அமைச்சருமான Jean-Yves Le Drian கூறும்போது, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் குறைந்துள்ளதையும், பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த இந்திய விமானப்படை விமானி விடுவிக்கப்பட்டதையும் வரவேற்கிறேன்.

அமைதிகாத்த மற்றும் பொறுப்புடன் நடந்து கொண்ட இரண்டு நாடுகளையும் வாழ்த்துவதோடு மீண்டும் பரஸ்பர பேச்சு வார்த்தைகளை தொடர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

தீவிரவாதத்திற்கெதிரான அனைத்து வகையான போராட்டங்களிலும் இந்தியாவுக்கு துணையாக நாங்களும் இருக்கிறோம் என்பதை மீண்டும் வலியுறுத்திக் கொள்கிறோம் என்று கூறிய அவர், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் இன்று புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது தடைகள் விதிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று பிரான்ஸ் நம்புவதாகவும் தெரிவித்தார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers