பிரான்சில் பயங்கர விபத்து... 33 பேரில் இலங்கையர்-பிரித்தானியர் எத்தனை பேர்? வெளியான முழு தகவல்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சிலிருந்து லண்டன் வந்த பேருந்து விபத்தில் சிக்கிய நிலையில், அதன் உள்ளே இருந்த பயணிகள் எந்தெந்த நாட்டை சேர்ந்தவர்கள், எத்தனை பேர் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

ஐரோப்பா முழுவதும் பேருந்து சேவை வழங்கி வரும் ஜேர்மனி-யின் FlixBus நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்து, 33 பேருடன் பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலிருந்து, பிரித்தானியா தலைநகர் லண்டனுக்கு கடந்த ஞாயிற்று கிழமை புறப்பட்டு சென்றது.

AFP

அப்போது Somme, Saint-Quentin அருகே ஏ1 மோட்டார் பாதையில் சென்றுக்கொண்டிருந்த போது மழை மற்றும் காற்று காரணமாக சறுக்கிய பேருந்து, சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வேலியை உடைத்துக்கொண்டு தாறு மாறாக உருண்டதால், விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் டிரைவர் மற்றும் பயணிகள் உட்பட 33 பேர் இருந்ததாகவும், அதில் 10 பயணிகள் பிரித்தானியாவை சேர்ந்தவர்கள் எனவும், இலங்கையை சேர்ந்தவர்களும் இதில் பயணித்திருப்பதாக கூறப்பட்டது.

GETTY IMAGES

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலில், 33 பயணிகளில் 11 பேர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள், 10 பேர் பிரித்தானியர்கள், 5 பேர் அமெரிக்கர்கள், 2 பேர் ரூமேனியா, ஸ்பெயின் அவுஸ்திரேலிய, மொரீசிய, ஜப்பானிய பயணிகளுடன் ஒரு இலங்கை பயணியும் பேருந்தில் பயணித்திருந்தாக கூறப்படுகிறது.

இதில் நான்கு பேருக்கு மட்டுமே பெரிய அளவிலான காயம் எனவும், அவர்கள் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மற்றவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அனுப்பி வைக்கப்பட்டுவிட்டதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்