நள்ளிரவு 2 மணி... 90 கிலோமீற்றர் வேகத்தில் செல்லும் லொறி: கொள்ளையடித்த பலே கொள்ளையர்கள்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

நள்ளிரவில், மணிக்கு 90 கிலோமீற்றர் வேகத்தில் செல்லும் வாகனங்களில் கொள்ளையடித்துவிட்டு, மீண்டும் தங்கள் வாகனத்துக்குத் திரும்பி தப்பும் பலே கொள்ளையர்கள் பிரான்சில் சிக்கியுள்ளார்கள்.

பிரான்சில் வேகமாக செல்லும் லொறிகளிலிருந்து வித்தியாசமான முறையில் 3.5 மில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து தப்பிய 10 பேர் சிக்கியுள்ள நிலையில், நிஜமாகவே இவர்கள் சிறந்த சர்க்கஸ் கலைஞர்கள் என பொலிசார் வியப்படைந்துள்ளனர்.

ரோமேனியாவைச் சேர்ந்த இந்த கொள்ளையர்கள் இதுவரை இதுபோன்ற 21 கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இந்த பலே கொள்ளையர்கள் கொள்ளையடிக்கும் விதமே வியப்பூட்டுவதாக உள்ளது.

விலையுயர்ந்த பொருட்கள் ஏற்றிச் செல்லும் லொறிகளைக் கண்காணிக்கும் இவர்கள், அந்த லொறி சாரதிகளுக்கு தெரியாமல் அவர்களை தூரத்தில் பின் தொடர்கிறார்கள்.

லொறி நெடுஞ்சாலைக்கு வந்ததும், கொள்ளையர்களின் வாகனம் லொறியை நெருங்குகிறது.

லொறி செல்லும் அதே வேகத்தில் கொள்ளையர்கள் தங்கள் வாகனத்தை லொறிக்கு பின்னால் சீரான வேகத்தில் செலுத்த, ஒரு கொள்ளையன் தங்கள் கார் ஓடிக் கொண்டிருக்கும்போதே, காரிலிருந்து வெளியே வந்து, காருக்கு மேல் ஏறி, பானட்டை அடைகிறான்.

முன்னால் சென்று கொண்டிருக்கும் வேகமாக சென்றுகொண்டிருக்கும்போதே, தனது வாகனத்தின் மீது நின்றபடி அதன் பூட்டை உடைக்கிறான் அந்த கொள்ளையன்.

பின்னர் லொறிக்குள் நுழைந்து தேவையான பொருட்களை கொள்ளையடித்துவிட்டு, மீண்டும் பின்னால் வரும் தனது காரின் பானட்டில் இறங்கி, காருக்குள் நுழைய, கொள்ளையடித்த பொருட்களுடன் தப்புகிறது இந்த கும்பல்.

ஒரு முறை இப்படி சாகசக் கொள்ளையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது சில கொள்ளையர்கள் சிக்க, அதைத்தொடர்ந்து இப்போது மொத்தம் 10 பேர் சிக்கியிருக்கிறார்கள்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்