கழுத்தில் குத்திய சிலுவையுடன் இறந்து கிடந்த பாதிரியார்: பின்னர் தெரியவந்த உண்மை!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சில் சித்திரவதை செய்யப்பட்ட அடையாளங்களுடனும், கழுத்தில் குத்திய சிலுவையுடனும் பாதிரியார் ஒருவர் அவரது வீட்டில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

வட பிரான்சிலுள்ள Agnetz என்ற இடத்திலுள்ள வீட்டில், கழுத்தில் குத்திய சிலுவையுடன் Roger Matassoli (91)என்ற பாதிரியார் இறந்து கிடந்தார்.

அவர் உடலில் சித்திரவதை செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் காணப்பட்டன. Matassoliயின் வீட்டில் வேலை செய்து வந்த Alexandre (19) என்பவர், பாதிரியாரின் வீட்டிலிருந்து அவரது காரையே எடுத்துக்கொண்டு தப்ப முயலும்போது பிடிபட்டார்.

விசாரணையில் Alexandreஐ Matassoli பாலியல் துஷ்பிரயோகம் செய்தது தெரியவந்துள்ளது.

அதற்கு பழி வாங்கவே Alexandre பாதிரியாரை கொலை செய்துள்ளார். மேலும் விசாரணையில், Alexandreஐ மட்டுமல்லாமல், அவரது தந்தையையும் அந்த பாதிரியார் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட Alexandre தற்கொலைக்கு முயன்றதாக அவரது தந்தை Stephane தெரிவித்துள்ளதோடு, தன்னையும் அந்த பாதிரியார் துஷ்பிரயோகம் செய்ததை அறிந்த தனது தந்தை தற்கொலை செய்துகொண்டதாகவும் அதிரவைக்கும் தகவல்களை அளித்துள்ளார்.

இந்த விடயங்கள் 1960க்கும் 2000க்கும் இடையில் நடைபெற்றுள்ளன. இதற்கிடையில், சித்திரவதை, கொலை மற்றும் கைது செய்யும்போது எதிர்த்தது ஆகிய குற்றங்கள் Alexandre மீது சுமத்தப்பட்டுள்ளன.

ஆனால், அவருக்கு மன நல பிரச்சனைகள் இருப்பதாக கூறப்படுவதையடுத்து, Alexandre மன நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்