புதிய கொரோனா மையங்களாகிப்போன பிரெஞ்சு நகரங்கள்: கடுமையான கட்டுப்பாடுகள் அறிமுகம்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரெஞ்சு நகரங்களான Bordeaux, Marseille மற்றும் தலைநகர் பாரீஸ் ஆகியவை பிரான்சின் புதிய கொரோனா மையங்களாகியுள்ளதால், கட்டுப்பாடுகளையும் மீறி கொரோனாவின் இரண்டாவது அலை உருவாகிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

ஆகவே, Bordeaux மற்றும் Marseille நகரங்களில் கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

Bordeaux நகரில் குடும்பங்கள் மற்றும் குழுக்கள் பூங்கா முதலான இடங்கள் உட்பட எங்கு கூடினாலும், அப்படி கூடும்போது பத்து பேருக்கு மேல் கூடக்கூடாது என தற்போது அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மதுபான விடுதிகளில் வரிசையில் நிற்பதற்கும், டிஸ்கோதேக்கள் மற்றும் திருமணம் மற்றும் பிற குடும்ப நிகழ்வுகளுக்காக நடத்தப்படும் தனியார் பார்ட்டிகளுக்கும் அனுமதியில்லை.

விளையாட்டுப்போட்டிகள் முதலான பெரிய நிகழ்ச்சிகளில் 5,000 பேர் வரை கலந்துகொள்ளலாம் என்ற நிலை மாறி, இனி 1,000 பேர் வரை மட்டுமே கலந்துகொள்ள அனுமதியளிக்கப்படுகிறது.

வீட்டிலிருந்து வேலை, அதிக போக்குவரத்து நேரங்களில் கூட்டத்தை தவிர்ப்பதற்காக அதிக பேருந்துகள் முதலான நடவடிக்கைகள், முதியோர் இல்லத்திலிருக்கும் உறவினர்களை காண இருவருக்கு மட்டுமே அனுமதி, இப்படிப்பட்ட விதிமுறைகளை பின்பற்றுவதை கண்காணிக்க கூடுதல் பொலிசார் என பல கட்டுப்பாடுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையில், Marseille நகரில் மருத்துவமனைகளிலுள்ள தீவிர சிகிச்சைப் பிரிவுகள் கிட்டத்தட்ட நிரம்பியாயிற்று.

எனவே, Marseille நகரிலும், கண்காட்சிகள் முதலான நிகழ்ச்சிகளுக்கு தடை, மாலை மயங்கும் நேரத்தில் பொது இடங்களில் மது அருந்துவதற்கு தடை முதலான புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்