பிரான்சில் ஆசிரியரை கொல்லும் முன்னர் பொதுமக்களிடம் உதவி கேட்ட தாக்குதல்தாரி

Report Print Arbin Arbin in பிரான்ஸ்

பாரிஸ் புறநகர் பகுதியில் பாடசாலை ஆசிரியர் கொல்லப்படுவதற்கு முன்னர், தாக்குதல்தாரி பொதுமக்களின் உதவியை நாடியதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசின் புறநகர் பகுதியில் நேற்றும் உள்ளூர் நேரப்படி மாலை 5.30 மணியளவில், பாடசாலை ஆசிரியர் ஒருவர் இஸ்லாமிய அடிப்படைவாதியால் கொடூரமாக கொல்லப்பட்டார்.

கழுத்து துண்டாக்கப்பட்ட நிலையில் அந்த ஆசிரியர் கொல்லப்பட்டதை அடுத்து, தாக்குதல்தாரி அப்பகுதியிலேயே நடமாடியதும், பின்னர் பொலிசாரால் கொல்லப்பட்டார்.

இந்த நிலையில், தாக்குதல்தாரி, அந்த ஆசிரியர் தொடர்பில் பொதுமக்களிடம் உதவி கேட்டது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மேலும், கொல்லப்பட்ட ஆசிரியரின் உடலை புகைப்படமாக பதிவு செய்து அதை, தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றி, கொலை செய்துள்ளதை வெளிப்படையாக அறிவித்தும் உள்ளார் என விசாரணை அதிகாரிகள் தரப்பு தற்போது தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கொடூர கொலை சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகத்தின் அடிப்படையில் இதுவரை 9 பேரை பிரான்ஸ் பயங்கரவாத தடுப்பு குழு கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் சாமுவேலை கொலை செய்து பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட 18 வயது இளைஞனின் தாய், தந்தை, தாத்தா, பாட்டி மற்றும் 17 வயது சகோதரனும் உட்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

ரஷ்யாவின் சிசன்ஸ் மாகாணத்தில் செயல்பட்டு வந்த இஸ்லாமிய பிரிவினைவாத குழுவினருக்கும் ரஷ்ய ராணுவத்திற்கும் இடையே 1990-2000 ஆண்டுகளில் சண்டை நடைபெற்று வந்தது.

இந்த சண்டையால் பாதிக்கப்பட்ட சிசன்ஸ் மாகாண மக்கள் ஆயிரக்கணக்கனோர் அகதிகளாக வெளியேறினர். அப்படி அகதிகளாக வெளியேறிய ஆயிரக்கணக்கானோருக்கு பிரான்ஸ் அடைக்கலம் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்