துருக்கி ஜனாதிபதியை படுமோசமாக சித்தரித்து அட்டை படத்தில் வெளியிட்ட பிரான்சின் பிரபல பத்திரிகை! குவியும் கண்டனம்

Report Print Basu in பிரான்ஸ்

பிரான்சின் பிரபல பத்திரிகை துருக்கி ஜனாதிபதியை எர்டோகனை படுமோசமாக சித்தரித்து கேலிசித்திரம் வெளியிட்டுள்ள சம்பவத்திற்கு அந்நாட்டு அதிகாரிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பிரான்சஸ் தலைநகர் பாரிஸில் முகமது நபியின் கார்ட்டூனை வகுப்பறையில் காட்டியதற்காக வரலாற்று ஆசிரியர் பாட்டி கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இஸ்லாம் மதம் உலகம் முழுவதும் நெருக்கடியில் உள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்தார்.

மக்ரோன் கருத்திற்கு துருக்கி ஜனாதிபதி எர்டோகன் கடும் கண்டனம் தெரிவித்தார்.

இந்நிலையில், பிரான்சின் பிரபல பத்திரிக்கையான சார்லி ஹெப்டோ தனது அட்டை படத்தில் துருக்கி ஜனாதிபதியை படுமோசமாக சித்தரித்து கேலிசித்திரம் வெளியிட்டுள்ளது.

இதற்கு துருக்கி அதிகாரிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக இரு நாடுகளிடையே நிலவி வந்த பதற்றம் தற்போது அதிகரித்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்