பிரான்சில் இதற்கு வலுக்கும் கோரிக்கைகள்! மீண்டும் திறக்கப்படுமா?

Report Print Santhan in பிரான்ஸ்
0Shares

பிரான்சில் திரையரங்குகள், கலாச்சார மையங்கள் போன்றவை மீண்டும் திறக்கும் படி கோரிக்கை வலுத்து வருகிறது.

பிரான்சில், கொரோனா வைரஸ் பரவல் முன்பு இருந்ததை விட, இப்போது அந்தளவிற்கு இல்லை.

பிரான்சின் கலாச்சார அமைச்சர் Roselyne Bachelot, நாட்டில் கொரோனாத் தொற்று குறைவடைய ஆரம்பித்ததும் அருங்காட்சியகங்களைத் திறக்கலாம் எனத் தெரிவித்திருந்தார்.

ஆனால் இதற்கு எதிர்ப்புத் தெவித்திருக்கும், பரிஸ் உட்படப் பல பெரு நகர முதல்வர்கள் மற்றும் பிரந்தியத் தலைவர்கள் அனைத்துக் கலாச்சார மையங்களையும் ஒன்றாகத் திறக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.

Ile-de-France, Hauts-de-France, Centre Val-de-Loire, Occitanie, Sud ஆகிய பிராந்தியங்களின் தலைவர்களும், Paris, Lille, Rennes, Clermont-Ferrand, Montpellier, Strasbourg, Tours, Rouen, Grenoble, Reims, Nantes ஆகிய பெருநகர முதல்வர்களும் இந்தக் கோரிக்கை மனுவில் இணைந்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்