பிரான்சில் இந்த பகுதியில் கொரோனா தீவிர சிகிச்சை நோயாளிகளின் எண்ணிக்கை உச்சம்! வெளியான தகவல்

Report Print Santhan in பிரான்ஸ்
0Shares

பிரான்சின் இல் து பிரான்சுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ள தீவிர சிகிச்சை நோயாளிகளின் எண்ணிக்கை உச்சக்கட்டத்தை அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளின் வரிசையில் பிரான்சும் உள்ளது. இருப்பினும் இங்கு இப்போது கொரோனா பரவல் அந்தளவிற்கு இல்லை.

இருப்பினும், இன்றைய நிலவரப்படி, 1.525 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இந்த எண்ணிக்கை கடந்த வருட மே மாதத்தின் பின்னர் இல் து பிரான்சுக்குள் பதிவாகின்றது.

இதற்கு முந்தைய சாதனையாக மே 3, 2020 ஆம் ஆண்டு 1,550 பேர் திவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அதன் பின்னர் தற்போது இந்த அதிகூடிய எண்ணிக்கை பதிவாகியுள்ளது. நேற்று திங்கட்கிழமை 1,484 பேராகவும், ஞாயிற்றுக்கிழமை 1.465 பேரும், சனிக்கிழமை 1.429 பேரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்